வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல் இந்தியாவைத் தாக்க காரணம் என்ன?

Bay Of Bengal Cyclone.
Bay Of Bengal Cyclone.
க.இப்ராகிம்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்கள் இந்திய நிலப்பரப்பை அதிகம் தாக்குகின்றன.

இந்தியா மூன்று பக்கம் கடலாலும், ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்டுள்ள தீபகற்ப பகுதி. மூன்று பக்கம் கடல் சூழப்பட்டு இருப்பதால் புயலின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவின் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, கேரளா போன்ற மாநிலங்கள் புயலால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாக உள்ளது. அதிலும் இந்தியாவை சூழ்ந்துள்ள இந்திய பெருங்கடல், அரபிக் கடல்களை காட்டிலும் வங்காள விரிகுடாவில் ஏற்படும் புயல்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

வங்காள விரிகுடாவில் புயல் அதிகம் ஏற்பட காரணம், அது அரபிக் கடலை காட்டிலும் குறைவான ஆழம் கொண்டது. இதனால் மிக விரைவாக வங்காள விரிகுடா கடலின் மேல்புறம் வேகமாக வெப்பமடைகிறது. இதன் காரணமாக நீர் ஆவியாகி பெரிய மேக கூட்டங்களாக திரண்டு விடுகின்றன. வங்காள விரிகுடாவின் மூன்று பக்கங்கள் நிலத்தால் சூழப்பட்டுள்ளதால் வங்காள விரிகுடவால் வெப்பத்தை அதிகம் வெளியிட வாய்ப்பு இல்லை. வடகிழக்கு பருவ காலங்களில் காற்று அதிகம் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா போன்ற பகுதிகளை நோக்கி வீசுவதால் வங்காள விரிகுடாவில் உருவான புயல்கள் நிலத்தை நோக்கி தள்ளப்படுகின்றன.

மேலும் நிலப்பரப்பில் அதிக அளவிலான வெப்பம் காணப்படுவதால் அவை புயலை விரைவாக இழுத்துக் கொண்டு மேகங்களை கரைகின்றன. இதனால் அதிக அளவிலான மழைப்பொழிவு ஏற்படுகிறது. இவ்வாறு வங்காள விரிவுடாவில் உருவாகும் பெரும்பாலான புயல்கள் இந்திய பகுதிகளை நோக்கி நகர்கின்றன. கடந்த ஐந்து ஆண்டில் வங்காள விரிகுடாவில் 12 புயல் உருவாகியுள்ளது. அரபிக் கடலில் 7 புயல் உருவாகியுள்ளது. இதில் பெரும்பான்மையான புயல்கள் இந்திய நிலப்பரப்பையே பெரும்பாலும் தாக்கி உள்ளன.

இதையும் படியுங்கள்:
சென்னையை துவம்சமாக்கும் புயல்கள். ஓ! இது தான் காரணமா?
Bay Of Bengal Cyclone.

அதே சமயம் அரபிக் கடலில் உருவாகும் புயல்கள் மத்திய கிழக்கு பகுதி நோக்கி சென்று விடுவதால் இந்திய நிலப்பரப்பு ஓரளவு பாதுகாப்பானதாக இருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com