ஏன் கரப்பான் பூச்சிகள் இரவில் மட்டும் வெளியே வருகின்றன?

Why do cockroaches only come out at night?
Why do cockroaches only come out at night?
Published on

கரப்பான் பூச்சிகள் அந்த காலங்களில் இருந்தே மனிதர்களுடன் இணைந்து வாழும் பூச்சிகளில் ஒன்று. அவை தங்கள் உடல் அமைப்பு, வாழ்க்கை முறை காரணமாக பல சூழல்களில் தகவமைத்துக்கொள்ளும் திறன் கொண்டவை. இந்தப் பூச்சிகளில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு பண்பு அவை பெரும்பாலும் இரவில் மட்டுமே வெளியே வருவது. இதற்குப் பின்னால் பல சுவாரசியமான உயிரியல் காரணங்கள் உள்ளன. இந்த கட்டுரையில் அது பற்றிய முழு விவரங்களைப் பார்க்கலாம். 

கரப்பான் பூச்சிகளின் உடல் அமைப்பு அவற்றின் இரவு வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு உருவாக்கியுள்ளது. அவற்றின் கண்கள் பெரியதாகவும், ஒளியை உணரும் திறன் குறைவாகவும் இருக்கும். இதனால், பகலில் பிரகாசமான ஒளியில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடிகிறது. மேலும், அவற்றின் உடல் தட்டையாக இருப்பதால், குறுகிய இடங்களில் எளிதாக நுழைந்து மறைந்துகொள்ள முடியும். இதுவும் அவற்றின் இரவு வாழ்க்கைக்கு ஏற்ற ஒரு தகவமைப்பு. 

கரப்பான் பூச்சிகள் பொதுவாக வெளிச்சத்திற்கு பயப்படும். இதை நாம் அடிக்கடி நம் வீடுகளில் காணலாம். விளக்கு எரியும் இடத்திலிருந்து எவ்வளவு தூரம் ஓடி மறைந்துகொள்ள முடியுமோ அவ்வளவு தூரம் ஓடும். இதற்கு காரணம் அவற்றின் முன்னோர்கள் பகலில் பறவைகள் போன்ற வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தப்பிக்க, ஒளியை தவிர்த்தது காரணமாக இருக்கலாம். 

கரப்பான் பூச்சிகள் பொதுவாக இரவில் மட்டுமே உணவைத் தேடி செல்லும். இதற்கு முக்கிய காரணம் அவற்றின் உணவு ஆதாரங்கள் பெரும்பாலும் இரவில் மட்டுமே கிடைப்பதுதான். உதாரணமாக சில கரப்பான் பூச்சிகள் இறந்த பூச்சிகள், சிறு உணவுத்துண்டுகள் போன்றவற்றை உண்கின்றன. இந்த உணவு ஆதாரங்கள் பெரும்பாலும் இரவில் மட்டுமே கிடைக்கின்றன. 

மேலும், இரவு நேரத்தில் வெப்பநிலை குறைவாக இருப்பதால், கரப்பான் பூச்சிகள் தங்கள் உடல் வெப்பத்தை பராமரிக்க எளிதாக இருக்கும். பகலில் வெப்பம் அதிகமாக இருப்பதால் அவை தங்களை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள கடினமாக இருக்கும். 

இதையும் படியுங்கள்:
முழுமையான ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் பெற பின்பற்ற வேண்டிய 3 முக்கிய விஷயங்கள்!
Why do cockroaches only come out at night?

கரப்பான் பூச்சிகளின் மிக முக்கிய எதிரிகள் பறவைகள், பள்ளிகள், எறும்புகள் போன்றவை. இந்த வேட்டையாடும் விலங்குகள் பெரும்பாலும் பகலில் அதிக சுறுசுறுப்பாக இருக்கும். எனவே, கரப்பான் பூச்சிகள் இரவில் வெளியே வருவதன் மூலம் இத்தகைய அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.  

இவ்வாறு கரப்பான் பூச்சிகள் தங்கள் வாழ்க்கை முறையை பல கோடி ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகின்றன. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com