முழுமையான ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் பெற பின்பற்ற வேண்டிய 3 முக்கிய விஷயங்கள்!

sea vegetables
sea vegetableshttps://www.fau.edu

நாம் நம் உடல் நலனில் அக்கறை செலுத்தி நீண்ட நாட்கள் ஆரோக்கியமுடன் வாழ விரும்பினால் முதலில் நம் கண் முன் தோன்றுவது ஊட்டச் சத்துக்கள் நிறைந்த உணவு வகைகளாகவே இருக்கும். இதற்கும் மேலாக நம் உணவு முறையிலும், வாழ்க்கை முறையிலும் 3 வித மாற்றங்களைப் பின்பற்றினாலே நாம் முழுமையான ஆரோக்கியம் பெற்று நீண்ட நாட்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும். அந்த 3 மாற்றங்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. நம் உணவில் இதுவரை சேராத, வழக்கத்திற்கு மாறான, அதிக ஊட்டச் சத்துக்கள் மற்றும் மைக்ரோ ஆர்கானிசம்கள் நிறைந்து நன்மைகள் தரக்கூடிய  உணவுகள் பல உள்ளன. உதாரணத்திற்கு, ஸீ (Sea) வெஜிடபிள்களை எடுத்துக் கொண்டால் அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆசியா மற்றும் கடலோரப் பகுதி மக்களின் பாரம்பரிய உணவாக இருந்து வருகிறது. அவற்றில், தரையில் வளரும் தாவரங்களில் இருப்பதை விட அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், கொழுப்பு அமிலங்கள், நார்ச் சத்து, அயோடின் மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. இதன் காரணம் அவை வளரும் தனித்துவமான சூழ்நிலையும் அவற்றின் பயோலாஜிகல் அடாப்டேஷன் குணமும் ஆகும்.

2. உணவை தேர்ந்தெடுப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு அவற்றை எவ்வாறு உண்கிறோம் என்பதும் மிக முக்கியம். மைண்ட்ஃபுல் ஈட்டிங் (Mindful Eating) முறையைப் பின்பற்றி நம் மனதுக்கும் உணவுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான செரிமானம் மற்றும் எடைப் பராமரிப்பு போன்றவை சாத்தியமாகும். மேலும், இம்முறையினால் பசி மற்றும் வயிறு நிரம்பிய உணர்வறியவும் கட்டுப்பாடின்றி உண்பதைத் தவிர்க்கவும் முடியும்.

இதையும் படியுங்கள்:
உடல் ஆரோக்கியம் - இந்த 8ல் இருக்கட்டும் கவனம்!
sea vegetables

3. உணவு உட்கொள்ள நாம் பயன்படுத்தும் பிளேட்டின் அளவு சிறியதாயிருந்தால் அதில் வைக்கப்படும் உணவு அதிகமாகத் தெரியும். இதனால் தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கவும் சமநிலை கொண்ட சரிவிகித உணவை உட்கொண்டு ஆரோக்கியத்தை நிலை நிறுத்தவும் முடியும்.

கரையக்கூடிய நார்ச்சத்து, மக்னீசியம், வைட்டமின் C, B12 உள்ளிட்ட பலவகை சத்துக்கள் அடங்கிய நோரி, ஸ்பைருலினா, க்ளோரெல்லா போன்ற கடல் காய்களை அளவாக மைண்ட்ஃபுல் முறையில் உட்கொண்டு இதய நோய் மற்றும் ஸ்ட்ரோக் வராமல் பல்லாண்டு காலம் வாழ்வோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com