நாயும், பூனையும் வேட்டையாடிய இரையை எதற்காக வீட்டிற்கு கொண்டு வருகின்றன?

dogs and cats
Pet Animals
Published on

நாம் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் நாயும் பூனையும் அடிக்கடி எலி, சிறிய பறவைகள் உள்ளிட்டவற்றை வேட்டையாடி வீட்டிற்கு வந்து போட்டுவிடும். இது இந்த விலங்குகள் அடிக்கடி செய்யக் கூடியவை. இதுபோன்ற இறந்த அல்லது இறக்கும் தருவாயில் உள்ள சிறு பிராணிகளை வீட்டிற்கு கொண்டுவரும்.

செல்லப் பிராணிகளின் இந்த சுபாவத்திற்கு பின்னால் ஒரு காரணமும் உள்ளது.  நாயையும் பூனையையும் 10,000 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதன் வளர்த்து வந்துள்ளான். ஆனாலும் செல்லப் பிராணிகளின் பூர்வீக காட்டு விலங்கின் குணம் முழுமையாக போகவில்லை.

என்னதான் நாயும் பூனையும் மனிதர்களுடன் நெருங்கி பழகி வந்தாலும் அதன் இயற்கையான வேட்டையாடும் குணம் போவதில்லை. பயிற்சியே இல்லாவிட்டாலும் கூட இந்த விலங்குகள் சிறு பிராணிகளை கண்டதும் வேகமாக துரத்தி சென்று பிடிக்கின்றன. அவைகளை குற்றுயிரும் கொலையுயிருமாக கொண்டு வந்து சேர்க்கின்றன. வேட்டையாடுவதில் உள்ள அதன் திறமை, மரபணுவின் மூலம் கடத்தப்பட்டு வந்தவை. அவை உயிர்வாழ அவற்றின் உள்ளுணர்வால் உந்தப்படுகின்றன.

இயற்கையில் காடுகளில் வளரும் பூனைகள் மற்றும் நாய்கள் வேட்டையாடுவதற்கு பொறுப்பாக தாய் இருப்பதால், அவை தங்கள் குட்டிகளுக்கு வேட்டையாடப் பயிற்சி அளிக்கிறது. தாய் பூனைகள் மற்றும் தாய் நாய்கள் தங்கள் சந்ததியினருக்கு எப்படி உயிர் வாழ்வது என்று கற்றுக்கொடுக்கின்றன. இந்தப் பயிற்சியில் இரையை எப்படிக் கண்டுபிடிப்பது, அவற்றை எப்படித் தாக்கி வேட்டையாடுவது மற்றும் அவற்றை எப்படிச் சாப்பிடுவது என்பதைக் கற்றுக்கொள்வதும், இதில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
குளிர்கால உணவுத் தேவைக்காக, கோடைக்காலத்தில் சேகரித்து வைத்துக்கொள்ளும் அதிசயப் பறவை!
dogs and cats

நாய்களைப் பொறுத்தவரை அது பிறந்த காலத்தில் இருந்தே மனித குலத்தோடு நெருங்கி பழகும் அம்சம் கொண்டவை. மனிதர்களுடன் பழகுவதில் பூனைகளை இதே போன்ற குணத்தை கொண்டவை தான். எல்லா நாய்களும் ஏதோ ஒரு வகையில் மனிதர்களை மட்டுமே தங்கள் உணவு தேவைகளுக்கு நம்பி உள்ளன. இதில் பூனை மாறுபடுகிறது.அவை எல்லாமே வீட்டுப் பிராணிகளாக இருப்பதில்லை.

வீடுகளுக்கு அருகில் உள்ள பகுதிகளில் வாழும் பூனைகள், உணவுத் தேவைகளுக்கு மனிதர்களை நம்பாமல் எலி உள்ளிட்ட சிறு பிராணிகளை வேட்டையாடி உண்கின்றன. அதே நேரத்தில் தங்கள் குடும்பத்தினருக்கு வேட்டையாடுதலை கற்றுக் கொடுக்கவும், பகிர்ந்து உண்ணவும் அவை கற்றுக்கொண்டுள்ளன.

செல்லப்பிராணிகள் வீட்டிற்கு வேட்டையாடிய பிராணிகளை கொண்டு வந்து கொடுப்பது ஒரு அன்பின் அடையாளம்தான். அறை குறை உயிருடன் அந்த சிறு பிராணி இருந்தால், அது உங்களுக்கு வேட்டையாடுவது எப்படி? என்று உங்களுக்கு கற்றுக்கொடுக்கத் தான் பாதி உயிருடன் ஒரு வேட்டையாடிய விலங்கை கொண்டு வருகிறது.

சில சமயங்களில் அது வேட்டையாடிய விலங்கை பெருமிதத்துடன் உங்களிடம் அர்ப்பணிக்கிறது. அதாவது அது உழைத்து சம்பாதித்த உணவை உங்களுக்கு தர வந்துள்ளது. என்ன தான் வீட்டில் அடைத்து வளர்த்தாலும் விலங்கின் பிறவி குணம் அதை விட்டுப் போவதில்லை. ஆயினும், அவற்றின் பகிர்ந்து உண்ணும் குணத்தினை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com