ஆக்சிஜன் சிலிண்டர்களை முதுகில் சுமக்கும் காலம் வருமா? 'தமிழக மரக்களஞ்சியம்' (Tamil Nadu Treepedia) செயலி சொல்வதென்ன?

Tamil Nadu Treepedia
Tamil Nadu Treepedia

 - தா.சரவணா

மரங்கள் இல்லாமல் மனிதர் இல்லை. மரங்களையும் மரங்களின் மதிப்பினையும் அறிந்து கொள்ளும் வகையில், `தமிழக மரக்களஞ்சியம்' (Tamil Nadu Treepedia) எனும் ஆப் வனத்துறையால் உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த செயலியில் என்ன ஸ்பெஷல் என்பதை அறிந்து கொள்வோம்:

தமிழ்நாடு புதுமை முயற்சி திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட இந்த செயலியில் எளிதாக மரம் வளர்ப்பு சார்ந்த அனைத்து தகவல்களும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் தங்கள் தேவைக்கேற்ற மரத்தை தேர்ந்தெடுக்கலாம். மேலும், விவசாயிகள் இந்த செயலியில் உள்ள `இடத்திற்கேற்ற மரத்தேர்வு’, `மர இனம் பொறுத்த தேர்வு’, `பயன்பாடு பொறுத்த தேர்வு’ போன்ற ஆப்ஷன்களை பயன்படுத்தி மண்ணிற்கேற்ற மரங்களை தேர்வு செய்து பயிரிடலாம்.

வீட்டுத்தோட்ட மரம் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரங்களின் வளர்ப்பு குறித்த தொழில்நுட்ப தகவல்கள் இதில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. 

Tamilnadu Treepedia செயலி விவசாயி மற்றும் வல்லுனர்களுக்கிடையே ஒரு பாலமாக செயல்படுகிறது. இதில் மரங்களின் பயன் மற்றும் அவற்றின் வளர்ப்பு முறைகள் குறித்த தகவல்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. 

பொதுவாகவே வர்த்தக ரீதியாக ஒரு குறிப்பிட்ட மர வகைகள் மட்டுமே பரவலாக வளர்க்கப்படுகின்றன. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த அம்மரங்களின் பண்புகளைக்கொண்ட மற்ற மரங்களை அடையாளம் காணவும் மற்றும் அவற்றின் நடவு தொழில்நுட்பத்தை தொகுத்து வழங்கவும் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக மரக்களஞ்சியம் செயலியில் கொடுக்கப்பட்ட தகவலில்,

இதையும் படியுங்கள்:
தமிழ் பாரம்பரிய உடற்பயிற்சி சாதனம் கர்லா கட்டை பற்றித் தெரியுமா?
Tamil Nadu Treepedia

"விவசாயிகள் மற்றும் மர வளர்ப்பு ஆர்வலர்களிடையே சமூக காடுகள், வேளாண் காடுகள், பண்ணைக் காடுகள் மற்றும் நகர மர நடவு போன்ற தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் மொத்த வனப்பரப்பு 24.16 விழுக்காடு. தேசிய வன கொள்கையின்படி, ஒவ்வொரு மாநிலத்திற்கும் 33 விழுக்காடு வனப்பரப்பு அவசியம். இதைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் பரப்பளவில் 25 விழுக்காடு பரப்பில், வருவாய் நிலங்களில் மர வளர்ப்பை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனியார் விவசாய நிலங்களில் மரம் வளர்ப்பை ஊக்குவிக்க தமிழ்நாடு வனத்துறை,  `தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல்' திட்டத்தின் கீழ் 'தனியார் நிலங்களில் மர வளர்ப்பு திட்டம்', 'ஆற்றுப்படுகை வாய்க்கால் ஓரங்களில் தேக்கு மர நடவு திட்டம்', 'அலுவலகம், வீட்டுப்பகுதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்குதல்' போன்ற மர வளர்ப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது''

என்று குறிப்பிட்டுள்ளது.

இது போன்ற நல்ல திட்டங்களை நாம் செயல்படுத்த முன்வர வேண்டும். ஏனெனில் இப்போது மனிதர்களின் அத்தியாவசிய பொருள்களுள் ஒன்றான குடிநீர் வணிகமயமாகிவிட்டது. நாம் உயிர் வாழ தேவையான ஆக்சிஜன் வணிகமயமாக மாறாமல் இருப்பதற்கு, மரங்கள் அவசியம். அதனால் ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் குறைந்தபட்சம் ஐந்து மரக்கன்றுகளையாவது நட்டு வைத்து பராமரிக்க வேண்டும் என உறுதி எடுக்க வேண்டும். அப்போது தான் நாம் எதிர்கால சந்ததியினர் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். இல்லையென்றால் ஆக்சிஜன் சிலிண்டர்களை விலைக்கு வாங்கி முதுகில் சுமந்து கொண்டு சுற்றும் காலம் வெகு தூரத்தில் இல்லை.       

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com