
உலகம் முழுவதும் சுமார் ஆயிரத்து நூறு வகையான வெளவால்கள் காணப்படுகின்றன. வெளவால்கள் அண்டார்ட்டிகா கண்டத்தைத் தவிர அனைத்து கண்டங்களிலும் வாழ்கின்றன.
பெரும்பாலான வெளவால்கள் மரக்கிளைகளில் வாழ்வதையே விரும்புகின்றன. சில வெளவால்கள் பெரிய இலைகளின் அடியில் தொங்கியபடியே வாழ்கின்றன. பல வெளவால்கள் இருட்டான குகைகளிலும் வாழ்கின்றன.
வெளவால்கள் பொதுவாக நன்கு பழுத்த பழங்களை விரும்பி சாப்பிடுகின்றன. இவ்வாறு பழங்களை சாப்பிட்டு முடித்த பின்னர் அவை பழக்கொட்டைகளை எங்காவது போட்டு விடுகின்றன. இவற்றின் மூலம் புதிய மரங்கள் வளர்கின்றன. இதன் மூலமாக வெளவால்கள் இயற்கை வளத்தை காப்பதில் உதவி செய்கின்றன.
சிலவகை வெளவால்கள் பறவைகளின் இரத்தத்தை உறிஞ்சிக் குடித்து உயிர் வாழ்கின்றன. அளவில் பெரிய சிலவகை வெளவால்கள் ஆடு மாடுகள் போன்றவற்றின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கின்றன. வெளவால்களில் எழுபது சதவிகித வெளவால்கள் பூச்சிகளை பிடித்து சாப்பிட்டு உயிர் வாழ்கின்றன.
லிட்டின் பிரௌன் வெளவால் ஒரு மணிநேரத்தில் ஆயிரத்து இருநூறு பூச்சிகளைப் பிடித்து உண்ணும் சக்தி உடையதாக உள்ளது. சிலவகை வெளவால்கள் தங்களின் கால்களின் மூலம் மீன்களை பிடித்து சாப்பிடுகின்றன. சிலவகை வெளவால்கள் தவளைகளை விரும்பி சாப்பிடுகின்றன. வெளவால்கள் பொதுவாக இரவு நேரத்திலே பறக்கக்கூடிய பூச்சிகளை விரும்பி சாப்பிடுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளவால்கள் தேனையும் சாப்பிடுகின்றன!
வெளவாலின் காதுகள் மிகவும் கூர்மையானவை. இவை தங்களுடைய கூரிய கேட்கும் சக்தி மூலமாக தங்களுக்கும் தங்களோட குட்டிகளுக்கு உணவை சுலபமாக தேடி கண்டுபிடிக்கின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் ஆப்பிரிக்கன் ஹார்ட் நோஸ்ட் வெளவால்கள் ஆறு அடி தொலைவில் நடக்கும் வண்டுகளின் காலடி சத்தத்தையும் கேட்கும் அளவிற்கு நுண்ணிய கேட்கும் திறனைப் பெற்றுள்ளன.
வௌவால்களின் மூக்குகளும் மிகவும் சக்தி வாய்ந்ததையாக உள்ளது. பழங்களைத் தின்னும் வெளவால்கள் இதன் மூலமாக நன்கு பழுத்த பழங்கள் எங்கு உள்ளது என்று சுலபமாகக் கண்டுபிடிக்கின்றன. வெளவால்கள் இருட்டிலும் நன்றாக பார்க்கும் திறமையை பெற்றுள்ளன. இவை பார்க்கும் பொருட்கள் அனைத்தும் கறுப்பு வெள்ளை வண்ணங்கள்லேயே தெரியும் என்பது ஒரு விசேஷச் செய்தியாகும்.
வெளவால்களின் கால்களில் கூரிய நகங்கள் அமைந்துள்ளன. இதன் உதவியால் இவை எங்கே வேண்டுமானாலும் விழாமல் தொங்கும் ஆற்றலைப் பெற்றுள்ளன. மேலும் இந்த கூரிய நகங்கள் மீன்களை சாப்பிடும் வெளவால்களுக்கு மீன்களை பிடிக்க உதவி செய்கின்றன. வெளவால்களின் கைககளில் அமைந்திருக்கும் இறக்கை பறக்க உதவுகின்றன.
வெளவால்கள் விவசாயிகளுக்கும் மனிதர்களுக்கும் இயற்கைக்கும் பலவிதங்களில் உதவி செய்கின்றன. பயிர்களை நாசம் செய்யும் ஒருவித பூச்சிகளை இவை பெருமளவில் பிடித்து சாப்பட்டு பயிர்களை காப்பாற்றுகின்றன. பிரௌன் வெளவால்கள் எனும் ஒருவித வெளவால்கள் கூட்டமாக சென்று கோடைகாலங்களில் இலட்சக்கணக்கில் இவ்வித பூச்சிகளை பிடித்துத் தின்று பயிர்களை காப்பாற்றுகின்றன. இதுமட்டுமில்லாமல் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஏராளமான பூச்சிகளை வெளவால்கள் சாப்பிட்டு அழிக்கின்றன. இவை பழங்களைத் தின்று அதன் கொட்டைகளை எறிவதன் மூலம் ஏராளமான புதிய மரங்களை உருவாக்குவதில் உதவுகின்றன. காடுகளில் வாழும் இத்தகைய வெளவால்களின் மூலம் காடுகளில் மரங்கள் பெருகி காடுகள் அழியாமல் காப்பாற்றப்படுகின்றன.
வெளவால்கள் பொதுவாக சாதுவான ஒரு உயிரினம்தான். ஆனால் அதற்கு யாராவது தீங்கு செய்ய நினைத்தால் அது தன்னை பாதுகாத்துக் கொள்ள மனிதர்களை தாக்கும் இயல்புடையவை.
வெளவால்கள் வருடத்திற்கு ஒரு முறை ஒரே ஒரு குட்டியை ஈனும். வெளவால் குட்டியோட தாய் இறந்து போனா மற்ற வெளவால்கள் அந்த குட்டியை வளர்க்கும் பொறுப்பை ஏற்கின்றன.
வெளவால்கள் தூய்மையை மிகவும் விரும்பும் ஒரு பாலூட்டியாகும். இவை அடிக்கடி தன்னோட உடலை சுத்தப்படுத்திக் கொண்டே இருக்கும் இயல்புடையன.
இந்தோனேஷியா பகுதிகளில் வசிக்கும் ஜெயின்ட் ப்ளையிங் பாக்ஸஸ் எனும் வெளவால்தான் மிகப்பெரிய வெளவாலாகும். இதன் இறக்கை ஆறு ஆடி அகலத்துக்கு அமைந்துள்ளன. வெளவால் இனத்தில் மிகவும் சிறிய வெளவால் தாய்லாந்து பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பம்பிள்பீ எனும் வெளவாலாகும்.