எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் சாமி
ஆடி போயிட்டேன் சொன்னப்ப இதை நம் அன்னை பூமி
நதிகள் போயிட்டிருக்கு ஒண்ணொன்னாய் வத்தி
சொல்லவே வேண்டாம் கடல்களைப் பத்தி
ஒரு பக்கம் கலக்குது அவற்றில் சாக்கடைகள் கோடி
மறுபக்கம் டன் கணக்கில் மீன்களை தேடி தேடி
கடற்கொள்ளை அடிக்கிறோம் சூறையாடி
எங்கே போய் இதெல்லாம் முடிய போறதோடி?
கடல்கள் இருந்தது நிஷ்களங்கமாய் நீலமாய்
ஆகி கொண்டிருக்கு அவை அலங்கோலமாய்
அழிந்து கொண்டிருக்கின்றன ஐம்பெரும் ஆழிகள்
காரணம் என்ன தெரியுமா கண்ணா?- நெகிழிகள்
சீக்கிரத்தில் பசிபிக் பெருங்கடல்
ஆகிவிடும் பிளாஸ்டிக் பெருங்கடல்
மலைகளை குடைந்து உடைத்து
வருகிறோம் சாலைகளை அமைத்து
போன பின் குன்றுகளும் மலைகளும் அனைத்து
நிற்க போகிறோம் அனைத்தையும் தொலைத்து
காடுகளை அழித்து போடுகிறோம் தோட்டம்
யானை துரத்தி போடுகிறது ஆட்டம்
பிடிக்கிறோம் உயிரை கையில் பிடித்து ஓட்டம்
காற்றில் கார்பன் கூடி போச்சு
எப்படி விடுவோம் நாளை நாம் மூச்சு?
எங்கு பார்த்தாலும் குளிர்சாதன பெட்டி
சாக வேண்டியது தான் நாம் சுவாசம் முட்டி
தொடங்கலாமா இன்றய தினம்
காக்க நதி, கடல், காடு, மலை வனம் ?
பூமி கடவுள் நமக்களித்த தனி இடம்