மனிதனால் அழிக்கப்பட்ட டால்ஃபின் இனம் பற்றி தெரியுமா?

Yangtze River Dolphin.
Yangtze River Dolphin.
Published on

இந்த உலகம் உருவானதிலிருந்து இன்று வரை ஆயிரக்கணக்கான மிருகங்கள் இந்த பூமியில் தோன்றி மறைந்துள்ளது. அதில் சில மிருகங்கள் மனிதர்களால் மொத்தமாக பூமியிலிருந்து அழிக்கப்பட்டுள்ளதென்பது உங்களுக்குத் தெரியுமா? 

மனிதர்களால் அழிக்கப்பட்ட மிருகங்களில் முதலாவதாக இருப்பது ‘யாங்சி ரிவர் டால்பின்’. சீனாவின் யாங்சி ஆற்றுப் படுகைகளில் இந்த விதமான டால்பின்கள் அதிக அளவில் இருந்துள்ளது. அங்கு வாழ்ந்த மக்கள் அனைவருமே இந்த டால்ஃபினை ‘பைஜி’ என அழைத்துள்ளனர். அதாவது இதற்கு ‘வெள்ளை தோல் டால்பின்’ என்று அர்த்தம். இந்த டால்பின் முதுகில் இருக்கும் துடுப்புகள் அனைத்தும் வெள்ளை நிறத்தில் இருக்கும். அதனால் இதற்கு ‘பைஜி வைட் டால்பின்’ என்ற பெயரும் உள்ளது.

கிட்டத்தட்ட 20 மில்லியன் ஆண்டுகளாக இந்த மிருகங்கள் மிகவும் மகிழ்ச்சியாக அந்த ஆற்றுப்படுகைகளில் வாழ்ந்து வந்தது. அதுமட்டுமில்லாமல் இது ஒரு நன்னீர் டால்பின் ஆகும். கிட்டத்தட்ட 8 முதல் 9 அடி நீளம் வரை வளரக்கூடிய இந்த டால்பின்கள், 300 முதல் 350 கிலோ எடை கொண்டதாக இருக்கும். இதன் ஆயுட்காலம் 25 ஆண்டுகள் என சொல்லப்படும் நிலையில், இந்த டால்ஃபின்கள் வாழ்ந்த பகுதியைச் சுற்றி ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக அழியத் தொடங்கியது. குறிப்பாக அந்தப் பகுதியில் தொழிற்சாலைகளின் வளர்ச்சி வேகமெடுக்கத் தொடங்கியதால் அதன் தாக்கம் இந்த டால்ஃபின்களை அழிவின் விளிம்பிற்குத் தள்ளியது. 

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய கழிவுகள் இந்த டால்ஃபின்கள் வாழும் ஆற்றுப் படுகையில் கொட்டப்பட்டதால், இவற்றின் வாழ்வாதாரம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இதைத் தாண்டி அந்த பகுதியில் வாழ்ந்த மக்களும் இந்த வகை டால்பின்களை பிடித்து உண்ணும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். இதனால் காலம் செல்லச் செல்ல இவற்றின் எண்ணிக்கை குறைந்து, ஒரு கட்டத்தில் பூமியில் இல்லாத உயிரினமாக முற்றிலும் அழிந்து போனது. 

இதையும் படியுங்கள்:
கிராமத் தேவதைக்கு டால்பின் படையல்!
Yangtze River Dolphin.

குறிப்பாக, இவை அழிந்ததற்கு போதிய அளவில் இனப்பெருக்க காலம் கொடுக்காமல் மனிதர்கள் அதிகமாக இவற்றைப் பிடித்து சமைத்து சாப்பிட்டது முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இறுதியாக, இந்த மீன் வகைகளை 1942 ஆம் ஆண்டுக்குப் பிறகு யாருமே பார்க்கவில்லை. இறுதியாக, 2002ம் ஆண்டுக்குப் பிறகு இந்த மீன்கள் பற்றிய எந்த தடையமும் யாங்சி நதிப் படுகையில் இல்லாமல் போனதால், இவை முற்றிலும் அழிந்த இனமாக அறிவிக்கப்பட்டது. 

இப்படி முழுக்க முழுக்க மனிதர்களின் செயல்களினாலே இந்த ‘யாங்சி ரிவர் டால்பின்’ பூமியிலிருந்து அழிக்கப்பட்ட சம்பவம் நம்மை உண்மையில் வேதனையடையச் செய்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com