சோலார் பயன்படுத்தி மின்சாரக் கட்டணத்தை Zero ஆக்கலாம்.. எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

Zero electricity bill using solar.
Zero electricity bill using solar.

அதிகத்து வரும் மின்சாரக் கட்டணம் மற்றும் மின்சார உற்பத்தியால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகள் ஏற்படுவதால், இந்தியாவில் பலரது வீடுகளில் சோலார் பேனர்களை பொருத்துங்கள் என அரசாங்கம் அறிவுறுத்துகிறது. இதன் மூலமாக மின்சாரக் கட்டணத்தை வெகுவாக குறைக்க முடியும் என சொல்லப்படும் நிலையில், அதை எப்படி நாம் பயன்படுத்திக் கொள்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். 

1. முதலில் இந்தியாவில் சூரிய சக்தி ஆற்றலைப் பற்றி புரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக இந்தியாவில் ஒரு ஆண்டில் 300 நாட்களுக்கு சூரிய ஒளி கிடைக்கிறது. சோலார் பேனல்கள் சூரிய ஆற்றலை மின்சாரமாக மாற்றுகின்றன. சோலார் பேனல்களால் உறிஞ்சப்படும் சூரிய ஆற்றல் டிசி மின்சாரத்தை உருவாக்கி, இன்வெர்ட்டர் வழியாக வீட்டுக்கு பயன்படுத்தும் ஏசி மின்சாரமாக மாற்றப்படுகிறது. 

2. சோலார் பேனல்களை நிறுவுவதற்கு முன் உங்களுடைய ஆற்றல் தேவையை மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியம். மாதாந்திர எவ்வளவு மின்சாரம் தேவை என்பதைத் தெரிந்துகொள்ள தற்போதைய மின்சாரக் கட்டணத்தை மதிப்பாய்வு செய்யவும். இந்த கணக்கீடுகளைப் பயன்படுத்தி உங்களது தேவைகளை பூர்த்தி செய்யும் சோலார் பேனர்களின் அளவு மற்றும் எண்ணிக்கையை தீர்மானிக்க வேண்டும். கூடுதலாக, நீங்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தப் போகிறீர்கள் எதிர்காலத்தில் உங்கள் வீட்டில் எதுபோன்ற மாற்றங்கள் ஏற்படலாம் போன்ற காரணிகளையும் கவனியுங்கள். 

3. சோலார் பேனல்கள் பல்வேறு கிலோவாட் அலுவுகளில் கிடைக்கிறது. எனவே உங்கள் வீட்டின் அளவு, பட்ஜெட் மற்றும் மின்சாரத் தேவையைப் பொருத்து சோலார் பேனல்களை நிறுவும் நிபுணர்களுடன் ஆலோசித்து தீர்மானிக்கவும். குறிப்பாக தரமான சோலார் பேனல்களை அனுபவம் வாய்ந்த நிறுவனத்தின் உதவியுடன் நிறுவுவது முக்கியமானது. மேலும் ஏற்கனவே அந்த நிறுவனத்தின் பொருத்தப்பட்ட சோலார் பேனல்களின் ரிவ்யூ, சான்றிதழ்கள், ஸ்டார் ரேட்டிங் போன்றவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள். 

4. சோலார் பேனல் பொருத்தம் முடிவு என்பது நீண்ட கால அடிப்படையிலேயே உங்களுக்கு பலனை ஏற்படுத்தும் ஒன்றாகும். தொடக்கத்தில் உங்களுக்கான செலவுகள் அதிகமாக இருந்தாலும், இந்த முதலீட்டின் எதிர்கால வருவாய் எப்படி இருக்கும் என்பதை கணக்கிடுங்கள். 

5. அரசாங்க சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வீட்டில் சோலார் பேனல்களைப் பொருத்துவதற்கு அரசாங்கம் பல முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. சோலார் பேனல்களுக்கு குறிப்பிட்ட அளவு மானியத்தையும் வழங்குகிறது. நீங்கள் பயன்படுத்தும் மின்சாரம் போக, கூடுதல் மின்சாரத்தை அரசாங்கத்திடம் விற்று பணம் சம்பாதிக்க முடியும். 

இதையும் படியுங்கள்:
சத்தான சிறுதானிய ஸ்பெஷல் ரெசிபிஸ்!
Zero electricity bill using solar.

6. சோலார் பேனல்களைப் பயன்படுத்தி உங்களது மின்சாரக் கட்டணத்தை குறைக்க சோலார் பேனல்களை முறையாக பராமரிக்க வேண்டும். சோலார் பேனல்களை சுத்தம் செய்வது குப்பைகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது, மேலே ஏதேனும் நிழல் ஏற்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்து அதற்கான தீர்வைக் காண்பது அவசியம். 

குறிப்பாக சோலார் பேனல் பொருத்தப்பட்டுள்ள இன்வெர்ட்டர் மற்றும் மின் இணைப்புகள் சரியாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்யுங்கள். இவை அனைத்தும் நன்கு பராமரிக்கப்படும் போது முறையான ஆற்றல் உற்பத்தி உங்களுக்குக் கிடைத்து சேமிப்பை அதிகப்படுத்தும்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com