சத்தான சிறுதானிய ஸ்பெஷல் ரெசிபிஸ்!

கம்பு கூழ்
கம்பு கூழ்tamil.webdunia.com

கம்பு கூழ்

தேவை: கம்பு மாவு ¼  கப், தண்ணீர் - 1 கப். மோர் - ½ கப், சின்ன வெங்காயம் - 3, பச்சை மிளகாய் - 1, கடுகு - ½ டீஸ்பூன், எண்ணெய் ¼ டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிட்டிகை உப்பு - தேவைக்கு.

செய்முறை: கம்பு மாவைச் சிறிது தண்ணீர் சேர்த்து, கட்டி இல்லாமல் கரைத்து மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கூழ் போல வேகவைத்துக்கொள்ளவும்.

இந்தக் கலவையை 5-6 மணி நேரம் மூடிவைக்கவும். பிறகு மோர் விட்டு, எண்ணெயில் கடுகு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து நன்கு கலக்கிப் பருகலாம். கம்பில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் தலைமுடி உதிர்வு உள்ளவர்கள் கம்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தலை முடி உதிர்வில் இருந்து விடுபடலாம். கம்பு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டை குறைக்கிறது.

காலை உணவாகவே இந்தக் கூழை குடிக்கலாம்.

கம்பு மாவு ரொட்டி

தேவை: கம்பு மாவு - ½ கப், கோதுமை மாவு - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, வெந்நீர் - தேவைக்கு (மாவுப் பிசைவதற்கு, எண்ணெய் / வெண்ணெய் - தேவைக்கு.

கம்பு மாவு ரொட்டி
கம்பு மாவு ரொட்டி

செய்முறை: கம்பு மாவு, கோதுமை மற்றும் உப்பு சேர்த்து வெந்நீர் தெளித்து, மிருதுவாகப் பிசையவும். அதிகம் தண்ணீர் விடக்கூடாது. ஒரே அளவுள்ள உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி கல்லில் இட்டு தேய்க்கவும்.

இதையும் படியுங்கள்:
இளநீர் தாகம் தணிக்க மட்டும்தானா?
கம்பு கூழ்

அடுப்பை சிம்மில் வைத்து நேரடியாக இரு புறமும் சுட்டு எடுக்கவும். அல்லது தோசைக்கல்லில் எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவி சுட்டு எடுக்கவும்.

கம்பு ரொட்டிக்கு வெஜிடபுள் குருமா அல்லது தக்காளி சட்னி சுவையான சைட் டிஷ்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com