விதவிதமான முளைக்கீரை சமையல் வகைகள்!

முளைக்கீரை (தண்டு) தோசை
முளைக்கீரை (தண்டு) தோசை

-பி.ஆர்.லட்சுமி

மொறுமொறு முளைக்கீரை (தண்டு) தோசை

வறுத்த ரவை-250 கிராம்

மைதா-125 கிராம்

சீரகம்-சிறிதளவு

உப்பு-தேவையான அளவு

இஞ்சி-சிறிதளவு

சின்ன வெங்காயம்-உரித்து பொடியாக்கியது-அரை தம்ளர்

இரண்டு தம்ளர்-தண்ணீர்

பிடி அவல்

முளைக்கீரை அரை கட்டு-200கிராம்

நெய்-சிறிதளவு

பச்சை மிளகாய்-4 அறுத்து துண்டுகளாக்கியது

கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் பொடிப்பொடியாக அறுத்து குக்கரில் உப்பு போடாமல் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவேண்டும். கீரை நன்கு வெந்த பின்னர் தேவையான உப்பு போட்டு இறக்கி வைக்கவேண்டும்.

மாவு கரைக்கும் விதம்

முதலில் ரவை, மைதாவைச் சலித்து எடுத்து தண்ணீர் ஊற்றி வைத்துக்கொள்ளவேண்டும். அதனுடன் இஞ்சி,பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், சீரகம், உப்பு இவற்றை நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவேண்டும். அரை மணி நேரம் மாவு ஊறிய பின்னர் தோசைக்கல்லில் ஊற்றி சிறிது நெய் ஊற்றவும். வெந்த கீரையை அதில் மேலாக போட்டு தோசையைச் சிவந்தவுடன் திருப்பி விடலாம். அல்லது மாவுடன் கீரையைக் கலந்தும் ஊற்றலாம்.

கேரட் முளைக்கீரை சுகியன்

தோசை மாவு-ஒரு கப்

கேரட் பொடியாக அறுத்தது-ஒரு கப்

முளைக்கீரை பொடியாக்கியது- இரண்டு கப்

பூண்டு- நான்கு பல்

இஞ்சி-சிறு துண்டு

வெள்ளை வெங்காயம்-அறுத்தது-அரை கப்

பச்சை மிளகாய்-4 அறுத்து துண்டுகளாக்கியது

உடைத்த கடலை மாவு (பொரிகடலை)-ஒரு கப்

வேர்கடலை(மலாட்டை)மாவு-அரை கப்

தேவையான அளவு உப்பு

பிரட்-நான்கு துண்டுகள்

அரை லிட்டர்-பொரித்தெடுக்க எண்ணெய்

இதையும் படியுங்கள்:
அட, அதெல்லாம் மறந்தே போச்சுங்க! எதெல்லாம்?
முளைக்கீரை (தண்டு) தோசை

குக்கரில் பொடியாக்கிய கேரட், பொடியாக்கிய கீரை, பச்சை மிளகாய்த்துண்டுகள், இஞ்சி, பூண்டு போன்றவற்றைப் போட்டு நன்கு வேக வைக்க வேண்டும். வெந்தபின் தேவையான அளவு உப்பு சேர்க்கவேண்டும். நாம் விரும்பினால் கடலைப்பருப்பு வேக வைத்து அரைத்த விழுதைச் சேர்க்கலாம். வேர்கடலை மாவு, உடைத்தகடலை மாவு, பிரெட் துண்டுகள் இவற்றை காய்கறி கலவையுடன் நன்கு சேர்த்து சிறு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். தோசைமாவில் இந்த உருண்டைகளை ஒவ்வொன்றாகப் போட்டு

கொதிக்கின்ற எண்ணெயில் பொரித்தெடுக்கலாம். அருமையான கீரை சுகியன் தயார்!!!

அன்னாசிப்பழ கீரை சூப்

அன்னாசிப்பழம்-அறுத்த துண்டுகள் -100கிராம்

முளைக்கீரை-வேக வைத்த துண்டுகள்(ஒரு கட்டு)

கேரட்-ஒன்று

இஞ்சி-சிறு துண்டு

பூண்டு-இரண்டு பல்

உருளைக்கிழங்கு-வேக வைத்து மசித்த பகுதி-கால் கப்

தக்காளி-ஒன்று

சின்ன வெங்காயம்-உரித்தது 50கிராம்

சீரகப் பொடி-ஒரு தேக்கரண்டி

மிளகுப்பொடி-ஒரு தேக்கரண்டி

உப்பு-தேவைப்படும் அளவு

அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழம்

அன்னாசிப் பழத்தை நன்கு மிக்சியில் போட்டு ஜூசாக்கி வடிகட்டிக்கொள்ளவும். கீரையை நன்கு கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

முளைக்கீரையுடன் தக்காளி, வேக வைத்து மசித்த உருளை, இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து குக்கரில் ஒரு தம்ளர் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

இரண்டு விசில் சத்தம் குக்கரில் இருந்து வந்தவுடன் குக்கரைத் திறந்து கீரையை ஆற விடவும். மிக்சியில் விழுதாக அரைத்து அன்னாசிப் பழச் சாறுடன் கலந்து கொள்ளவும். இறுதியாக சீரகப்பொடி,மிளகுப்பொடி,உப்பு கலந்து பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும். உருளைக் கிழங்கு சேர்ப்பதால் சூப் கட்டியாக சோளமாவு கலக்க வேண்டாம். உருளை ஒத்துக்கொள்ளாது என்றால் சோளமாவு சேர்க்கலாம். அல்லது பிரெட், பன் சேர்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com