
ஜப்பான் பல வகையான சுவையில் உணவுகளை வழங்குவதுபோல், குடிப்பதற்கு பல வகையான சுவையும் ஊட்டச் சத்துக்களும் நிறைந்த பானங்களையும் வழங்கி வருகிறது. அவற்றுள் மிக அதிகமான ஊட்டச்சத்துக்களை வழங்கக்கூடிய 10 வகை பானங்களைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1.முஹிச்சா (Mugicha): வறுத்த பார்லியிலிருந்து தயாரிக்கப்படும் காஃபின் இல்லாத டீ இது. லேசான கசப்பு சுவையுடைய இந்த டீயில் நார்சத்து அதிகம். அது இரைப்பை குடல் இயக்கங்கள் சீராக நடைபெற உதவும். கோடை உஷ்ணத்தைத் தணிக்க இதை குளிர்வித்து அருந்துவதே வழக்கமாயுள்ளது.
2.அமாஸகே (Amazake): பாரம்பரிய முறையில் அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் நொதிக்கச் செய்த பானம் இது. இதில் ப்ரோட்டீன் சத்து அதிகம். குளுகோஸ் சத்தும் இதில் உண்டு.
3.ஸோபா-சா (Soba-Cha): வறுத்த பக் வீட் (Buckwheat)டில்
இருந்து தயாரிக்கப்படும் காஃபின் இல்லாத டீ இது. அதிகளவு நட்டி ஃபிளேவர் கொண்டது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதய இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி புரியும். தினசரி உணவுடன் சேர்த்துக்கொள்ள ஏற்ற பானம்.
4.குரோஸு(Kurozu): 'கோட்டை ஹக்கோ' (Kotai Hakkou) எனப்படும் பாரம்பரிய நொதிக்கச்செய்யும் முறையைப் பின்பற்றி தயாரிக்கப்படும் பானம். இது பிளாக் வினிகர் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் அமினோ ஆசிட் அதிகம் உள்ளது. எடைக் குறைப்பிற்கு உதவும் பானம்.
5.யுஸு டீ (Yuzu tea): வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ள 'யுஸு' என்றொரு சிட்ரஸ் பழத்திலிருந்து தயாரிக்கப்படும் டீ இது.
6.ஷிஸோ (Shiso) ஜூஸ்: பாரம்பரிய மருத்துவத் தயாரிப்பில் உபயோகிக்கப்படும் 'ஷிஸோ' இலைகளிலிருந்து இந்த ஜூஸ் தயாரிக்கப்படுகிறது. ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமுடைய ஜூஸ் இது. இதிலுள்ள அதிகளவு ரோஸ்மரினிக் அமிலம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
7.கோபோச்சா (Gobocha): ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி ஏஜியிங் (Anti Ageing) குணங்கள் கொண்ட காஃபின் இல்லாத டீ இது. 'பர்டாக் ரூட் டீ' (Burdock Root Tea) எனவும் அழைக்கப்படும் டீ. உடலின் மொத்த ஆரோக்கியத்திற்கும் உதவக் கூடிய வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள டீ.
8.ஆஜைரு (Aojiru): காலே மற்றும் பார்லே போன்ற பச்சை இலைக் காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் வெஜிடபிள் ஜூஸ் இது. லேசான கசப்பு சுவை கொண்ட இந்த ஜுஸில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சத்துக்கள் மிக அதிகம்.
9.சாகுறா டீ (Sakura Tea) : செர்ரி ப்ளாஸ்ஸோம் கொண்டு தயாரிக்கப்படும் இந்த டீ மிக மெல்லிதான, சுகந்தமான மணம் கொண்டது. உணர்வுகளை சுண்டியிழுக்கும் அனுபவம் தரக்கூடியது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்த டீ.
10.ஜென்மைச்சா (Genmaicha): வறுத்த பிரவுன் ரைஸ் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பிரவுன் ரைஸ் டீ, நட்டி ஃபிளேவர் தரக்கூடியது. இது ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கவும், செய்யும் வேலையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் உதவக்கூடிய டீ.