சமையல் எண்ணெய் அளவை குறைத்து ஆரோக்கியம் பெறுங்கள்!

Reduce the amount of cooking oil and get healthy!
healthy oil article
Published on

ரோக்கியமான வாழ்வுக்கு தினமும் நம் உடலுக்கு சக்தி தேவைப்படுகிறது. நம் உடலுக்கு தேவைப்படும் சக்தியில் கார்போ ஹைட்ரேடில் இருந்து 60 சதவீதம், புரதத்தின் வாயிலாக 10-15 சதவீதம், மீதி உள்ள 20-25 சதவீதம், கொழுப்பில் இருந்து தினசரி சாப்பிடும் உணவின் வாயிலாக கிடைக்கிறது. உயரம், உடல் எடை இவற் றின் அடிப்படையில் பார்த்தால், சராசரியாக தினமும் நமக்கு 50 கிராம் கொழுப்பு தேவைப்படுகிறது.

பால், பால் பொருட்கள், முட்டை, மாமிசம் போன்ற இயற்கை உணவில் இருந்து இந்தக் கொழுப்பு சத்து கிடைப்பது ஆரோக்கி யமானது.

அப்படி செய்யும்போது, சமையல் எண்ணெய் பயன்பாட்டை முடிந்த அளவு குறைத்துக்கொள்ள முடியும். இதுதான் ஆரோக்கியமான முறை.

அந்த வகையில், 20 -25 மில்லி சமையல் 'எண்ணெய்தான் ஒரு பெண்ணிற்கு ஒரு நாளைக்கு தேவைப்படும். அதாவது நான்கு அல்லது ஐந்து டீ ஸ்பூன்.

பாமாயில், நெய், வனஸ்பதி, தேங்காய் எண்ணெய், வெண்ணெய் போன்ற சமையல் எண்ணெய்களில் உள்ள சூடு, புறச்சூழல்களால் மூலக்கூறு அமைப்பில் மாற்றம் அடையும் தன்மை உள்ள நிறைவுற்ற கொழுப்புதன்மை இருப்பதால் இவற்றை அதிகபட்சம் 5 மில்லி மட்டுமே உபயோகிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
புழுங்கல் அரிசி மற்றும் தானிய உணவுகள்: உடல் நலனுக்கு அற்புத பலன்கள்!
Reduce the amount of cooking oil and get healthy!

ஏனெனில் எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பை இது அதிகரிக்கும். அதிகப்படியான கொழுப்பு உணவில் இருந்து சேமிக்கப்படுவதைவிட அதிகப்படியான எண்ணெய் கொழுப்பை சேமிப்பது உடலுக்கு சுலபம்.

எண்ணெய் எந்த சூழ்நிலையிலும் திரவ நிலையிலேயே  இருக்கும். நிறைவுறாத கொழுப்பு எண்ணெய் வகைகளில் பாலி, மோனோ என்ற இருவகைகள் உள்ளன.

இவை ஸ்மோக்கிங் பாயிண்ட் எனப்படும் சூடுபடுத்தும் போது புகை வரும் நிலை வரை இதன் தன்மையில் எந்த மாற்றமும் இருக்காது. 

சூரியகாந்தி விதை, கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், கனோலா எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவை இந்த வகைப்படும்.

அந்த வகையில் பாலி அன் சேச்சுரேட்டட் எனப்படும் பல நிறைவுறாத கொழுப்பு உள்ள ஆலிவ் எண்ணெய் ,கடுகு எண்ணெய், கடலை எண்ணெய், கனோலா எண்ணெய் போன்றவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் இவை மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.

நாம் அன்றாடம் இந்த இரண்டு வகையிலும் உள்ள எண்ணெய் கலந்து பயன்படுத்த வேண்டும். ஒரே எண்ணையை உபயோகிக்காமல் மாற்றி மாற்றி உபயோகிக்கலாம்.

காரணம் கொழுப்பில் கரையக்கூடிய விட்டமின் ஏ,ஈ,கே  போன்றவை குறிப்பிட்ட எண்ணெயில் மட்டுமே உள்ளன. எந்த எண்ணெய் பயன்படுத்தினாலும் 25 மில்லிக்கு மேல் சாப்பிடக்கூடாது. அதாவது ஒரு மாதத்திற்கு ஒரு நபர் 750 மில்லிதான் பயன்படுத்த வேண்டும். ஆண்டிற்கு 10 லிட்டர் தேவைப்படும்.

இதையும் படியுங்கள்:
மாணவர்களின் வெற்றிக்கு வித்திடும் 9 சிந்தனைத் துளிகள்!
Reduce the amount of cooking oil and get healthy!

இது ஐ.சி.எம்.ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிர்ணயித்த அளவை விடவும் 3 லிட்டர் குறைவுதான். இனிமேல் எண்ணெயை பயன்படுத்தும் போதும் அல்லது வாங்கும்போதும் மேற்கூறிய கருத்துக்களை நினைவில் கொண்டு நல்ல சமையல் எண்ணையை வாங்கி  ஆரோக்கிய வாழ்வு பெறுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com