குழந்தைகள் சமத்தாக சாப்பிட 10 எளிய டிப்ஸ்!

Childrens...
Childrens...Image credit - hgic.clemson.edu
Published on

விடுமுறை விட்டாச்சு. இனி வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு சத்தானதாகவும் தர வேண்டும். அதே சமயம் அவர்களுக்கு பிடித்ததாகவும் இருக்க வேண்டும். என்ன செய்யலாம் இதோ  சின்ன சின்ன உணவு டிப்ஸ் உங்களுக்காக...

குழந்தைகள் பால் குடிக்க மறுக்கிறார்களா? இருக்கவே இருக்கு டேஸ்டான சத்துள்ள தேங்காய்ப்பால். கேரட்டுகளை அடித்து அதன் சாறு எடுத்து தேங்காய்ப் பாலில் கலந்து தேவையான நாட்டுச்சக்கரை, ஏலக்காய்த் தூள் சிறிது கலந்து தந்தால் எந்த குழந்தையும் அடம் பிடிக்காமல் குடித்துவிடும்.

குழந்தைகள் ஐஸ் கேட்கிறார்களா? கடையில் வாங்கித் தர விருப்பமில்லையா? சுண்டக்காய்ச்சிய பாலில் வெண்ணிலா பாதாம் போன்ற எசன்ஸ் சில துளிகள் விட்டு பொடித்த சர்க்கரை சேர்த்துக் கலந்து மோல்டில் ஐஸ் குச்சியுடன் பிரீசரில் வைத்துக் கெட்டியானவுடன் தந்து பாருங்கள். உங்களுக்கு முத்தம் கிடைக்கும்.

முளை கட்டிய பயிறு வகைகளில்  சிறிது தேனும் துருவிய தேங்காயும் கலந்து சீரக மிட்டாய்களைத் தூவித் தாருங்கள். கலர்புல் ஸ்வீட் பயிறு வயிற்றுக்குள் வேகமாக செல்லும்.

கடாயில் நெய்யூற்றி நறுக்கிய முந்திரி, பாதாம், திராட்சை போட்டு சிவந்ததும் அதிலேயே  ரவையைப் போட்டு வறுத்து தேவையான கொதிக்கும் நீரூற்றி வெந்ததும் நாட்டுச் சக்கரை, ஏலக் காய்த்தூள்  தூவி சுருள இறக்கி தந்து பாருங்கள். நிமிடத்தில் பறக்கும் ரவாகேசரி.

கடைகளில் தற்போது முந்திரி திராட்சை பாதாம் செர்ரி எனக் கலந்து பாக்கெட்டில் விற்கிறார்கள், அதை வாங்கி அனைத்தையும் மிக்சியில் இட்டு சுழற்றி பல் குத்தும் குச்சியில் சிறிய உருண்டையாக செருகிக் கொடுங்கள். நல்லாருக்கே லாலிபாப் என்பார்கள்.

தினமும் ஒரு பழம் என வாழைப்பழம், சப்போட்டா, ஆப்பிள், மாதுளை போன்றவைகளை பாலில் அடித்து மில்க்க்ஷேக் செய்து கொடுங்கள். மில்க்க்ஷேக் வேண்டாம் என்றால் பியூர் ஜூஸாகத் தாருங்கள்.

வாழைப்பழங்களை நறுக்கி அதில் நாட்டுசசர்க்கரை, தேன், ஏலக்காய் சேர்த்து கலந்து தாருங்கள். (பழங்கள் அவர்கள் சாய்ஸ்).

இதையும் படியுங்கள்:
கொழுப்பைக் குறைக்கும் 6 அற்புதப் பழங்கள்!
Childrens...

கொஞ்சம் கோதுமை மாவில் ஒரு முட்டையை நன்கு அடித்துக் கலந்து உடன் சிட்டிகை சோடா உப்பு, ஒரு ஸ்பூன் நெய் ,ஒரு துளி பிடித்த எசன்ஸ், தேவையான சர்க்கரை கலந்து பான் கேக்காக  ஊற்றித் தந்தால் சந்தோஷமாக சாப்பிடுவார்கள்.

கெட்டி அவல் அல்லது சிவப்பு அவல் உங்கள் சாய்ஸ்.. நன்கு அலசி சூடான பாலில் ஊறவைத்து சர்க்கரை & நாட்டுச் சர்க்கரை சேர்த்து 2 ஏலக்காய்  தட்டிப்போட்டு தேங்காய்த் துருவல் தூவித் தாருங்கள்.

வெள்ளரிக்காய், கேரட் , பழங்கள் (எது இருந்தாலும், வாழைப்பழம் பெஸ்ட்) பேரிச்சை, உலர் திராட்சை ஆகியவற்றை நறுக்கி அதில் கொஞ்சம் குளுக்கோஸ் சேர்த்துத் தந்து பாருங்கள். வெயிலுக்கு ஏற்ற சாலட்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com