
உடல் எடையை குறைக்க பலரும் பலவிதமான முயற்சிகளை செய்கிறார்கள். அதில் உலர் பழங்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன என்பது பலருக்கு தெரிவதில்லை. உலர் பழங்களில் சர்க்கரை அதிகம் என்பதால் உடல் எடை கூடும் என பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், சில உலர் பழங்களை சரியான முறையில் சாப்பிட்டால் உடல் எடையை குறைக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம், உலர் பழங்களில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை பசியை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைக்க உதவும். இந்தப் பதிவில், உடல் எடையைக் குறைக்க உதவும் 2 எளிய மற்றும் சுவையான உலர் பழ ரெசிபிகளைப் பற்றி பார்ப்போம்.
1. பாதாம் மற்றும் பேரீச்சை ஸ்மூத்தி (Almond and Date Smoothie):
இந்த ஸ்மூத்தி சுவையாக இருப்பது மட்டும் இல்லாமல், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. பாதாமில் நல்ல கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் புரதம் உள்ளது. இது நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவும். பேரீச்சையில் இயற்கையான இனிப்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்:
பாதாம் - 8-10 (ஊற வைத்தது)
பேரீச்சை - 3-4 (கொட்டைகள் நீக்கியது)
பால் அல்லது தயிர் - 1 கப்
தேன் - 1 தேக்கரண்டி
செய்முறை:
பாதாம் மற்றும் பேரீச்சையை மிக்ஸியில் போடவும்.
பின்னர், பால் அல்லது தயிர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
தேவைப்பட்டால் தேன் சேர்த்து கலக்கினால் சுமத்தி தயார்.
இதை ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்வித்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
இந்த ஸ்மூத்தியை காலை உணவாக அல்லது மாலை சிற்றுண்டியாக சாப்பிடலாம்.
2. அத்தி மற்றும் வால்நட் எனர்ஜி பால்ஸ் (Fig and Walnut Energy Balls):
சர்க்கரை நிறைந்த இனிப்புகளுக்கு பதிலாக, இந்த எனர்ஜி பால்ஸ் ஆரோக்கியமான மாற்றாக இருக்கும். அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது செரிமானத்திற்கு நல்லது. வால்நட் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்தது, இது உடல் எடையை குறைக்க உதவும்.
தேவையான பொருட்கள்:
உலர் அத்திப்பழம் - 1/2 கப்
வால்நட் - 1/2 கப்
ஓட்ஸ் - 1/4 கப்
தேன் - 1-2 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை தூள் - சிறிதளவு
செய்முறை:
அத்திப்பழம் மற்றும் வால்நட்டை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
பின்னர், ஓட்ஸ், தேன் மற்றும் இலவங்கப்பட்டை தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
இந்த கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டவும்.
இறுதியாக, ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் குளிர வைத்து பரிமாறவும்.
இந்த எனர்ஜி பால்ஸை உடற்பயிற்சிக்கு முன் அல்லது பின் சிற்றுண்டியாக சாப்பிடலாம்.