
இன்றைக்கு சுவையான கிண்ணத்தப்பம் மற்றும் பாதாம் அல்வா ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே செய்யலாம் வாங்க.
கிண்ணத்தப்பம் செய்ய தேவையான பொருள்.
பச்சரிசி-1 கப்
தேங்காய் பால்-1/2 கப்
சர்க்கரை-1 கப்
முட்டை-2
ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி
நெய்-தேவையான அளவு
கிண்ணத்தப்பம் செய்முறை விளக்கம்.
முதலில் 1 கப் பச்சரிசியை சுடுத்தண்ணீரில் 4 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். இப்போது அதை மிக்ஸியில் சேர்த்து ½ கப் தேங்காய் பால் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது மிக்ஸியில் 1 கப் சர்க்கரை, 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள், 2 முட்டை சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
இப்போது ஒரு பவுலில் அரைத்து வைத்த இரண்டு கலவையையும் சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக் கொள்ளவும். இப்போது குழியான தட்டு ஒன்றில் நெய் சிறிது தடவி விட்டு செய்து வைத்திருக்கும் கலவையை ஊற்றி இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான கிண்ணத்தப்பம் தயார். இதை வேண்டிய அளவு துண்டு துண்டுகளாக வெட்டி பரிமாறவும். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
பாதாம் அல்வா செய்ய தேவையான பொருட்கள்.
பாதாம்-1/2 கிலோ
பால்-1 கப்
குங்குமப்பூ ஊற வைத்த பால்-1 கப்
சர்க்கரை-400 கிராம்
நெய்-5 தேக்கரண்டி
பாதாம் அல்வா செய்முறை விளக்கம்.
முதலில் ½ கிலோ பாதாமை இரவு ஊறவைத்து காலையில் எடுத்து தோல் உரித்து மிக்ஸியில் சேர்த்து பால் 1 கப் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். இப்போது அரைத்த பாதாமை ஃபேனில் சேர்த்துக்கொண்டு இதனுடன் 1 கப் பாலில் குங்குமப்பூ சேர்த்து ஊற வைத்ததை சேர்த்துக்கொள்ளவும்.
இதை நன்றாக கலந்துவிட்ட பிறகு நெய் 1 தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும். இப்போது 400 கிராம் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்துவிடவும். நெய் 1 தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும். அவ்வளவு தான் சுவையான பாதாம் அல்வா தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டில் ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.