இன்ஸ்டன்ட் சேமியா இட்லி - ராஜஸ்தான் பூண்டு சட்னி ரெசிபிஸ்!

Semiya Idli-Rajasthan Garlic Chutney
Semiya Idli-Rajasthan Garlic Chutney
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on

ன்றைக்கு சுவையான சூப்பர் ஈஸி சேமியா இட்லி மற்றும் ராஜஸ்தான் பூண்டு சட்னி ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

சேமியா இட்லி செய்ய தேவையான பொருட்கள்

எண்ணெய்-தேவையானா அளவு

சேமியா-1/2 கப்

ரவை-1/4 கப்

கடுகு-1 தேக்கரண்டி

உளுந்து-1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி

முந்திரி-5

உப்பு-தேவையான அளவு

தயிர்-1 ½ கப்

துருவிய கேரட்-1/2 கப்

துருவிய தேங்காய்-2 தேக்கரண்டி

மஞ்சள் தூள்-சிறிதளவு

கொத்தமல்லி-சிறிதளவு

சேமியா இட்லி செய்முறை விளக்கம்.

முதலில் ஃபேனில் சிறிது எண்ணெய் விட்டு அதில் ½ கப் சேமியா, ¼ கப்ரவை சேர்த்து சற்று வறுத்து எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும். இப்போது கடாயில் சிறிது எண்ணெய் விட்டு 1 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி உளுந்து, 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு, முந்திரி 5 சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

இப்போது வறுத்து வைத்த சேமியாவில் தேவையான அளவு உப்பு, 1 ½ கப் தயிர் சேர்த்து கலந்துவிட்டுக் கொள்ளவும். இதில் துருவிய கேரட் ½ கப், கொத்தமல்லி சிறிதளவு, மஞ்சள் தூள் சிறிதளவு, துருவிய தேங்காய் 2 தேக்கரண்டி, தாளித்து வைத்ததையும் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு இதை இட்லி தட்டில் ஊற்றி 10 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான சேமியா இட்லி தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

ராஜஸ்தான் பூண்டு சட்னி செய்ய தேவையான பொருட்கள்

பூண்டு-30

மிளகாய் தூள்- 1 ½ தேக்கரண்டி

மல்லித்தூள்-1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்-1 தேக்கரண்டி

உப்பு-1 தேக்கரண்டி

நறுக்கிய பூண்டு-5

எண்ணெய்-3 தேக்கரண்டி

சீரகம்-1 தேக்கரண்டி

எழுமிச்சைப் பழ சாறு-1/2 மூடி

ராஜஸ்தான் பூண்டு சட்னி செய்முறை விளக்கம்.

முதலில் 30 பூண்டை கொரகொரப்பாக தட்டி எடுத்துக் கொள்ளவும்.  இப்போது இதை பவுலில் சேர்த்து விட்டு 1 ½ தேக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி மல்லித்தூள், 1 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி உப்பு, மெல்லிதாக 5 பூண்டை நறுக்கி இத்துடன் சேர்த்துவிட்டு தண்ணீர் சிறிது விட்டு கலந்துவைத்துக் கொள்ளவும்.

இப்போது கடாயில் 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சீரகம் 1 தேக்கரண்டி சேர்த்துவிட்டு செய்து வைத்திருக்கும் பூண்டை இத்துடன் சேர்த்து நன்றாக வதக்கவும். சிறிது தண்ணீர் விட்டு எண்ணெய் பிரிந்துவரும் வரை வதக்கி கடைசியாக1/2 மூடி எழுமிச்சை சாற்றை சேர்த்து கலந்துவிட்டு இறக்கினால், சுவையான ராஜஸ்தான் பூண்டு சட்னி தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

இதையும் படியுங்கள்:
அல்டிமேட் சுவையில் வெந்தயக் குழம்பு - வாழைத்தண்டு புளிப்பச்சடி செய்யலாமா?
Semiya Idli-Rajasthan Garlic Chutney
logo
Kalki Online
kalkionline.com