இன்றைய அவசர உலகில் மோசமான உணவு பழக்கவழக்கங்கள் காரணமாக நம் உடலில் ரத்த சர்க்கரை, கொலஸ்ட்ரால் மனஅழுத்தம், யூரிக் அமிலம், இரத்த அழுத்தம் ஆகியவை பொதுவான பிரச்னையாக மாறிவிட்டது. இதில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பு காரணமாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பவர்கள் எண்ணெய் கார உணவு வகைகளை தவிர்த்து குறிப்பிட்ட அதாவது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் உணவு வகைகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். அந்த வகையில் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவும் சட்னி வகைகளையும், அதனை தயாரிக்கும் முறையையும் அறிந்து கொள்ளலாம்.
1.பூண்டு கொத்தமல்லி சட்னி
பூண்டு மற்றும் கொத்தமல்லி இரண்டுமே கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்டவை. அதோடு, உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி இரத்தத்தை சுத்திகரிக்கும். கொலஸ்ட்ரால் நோயாளிகள் கண்டிப்பாக பூண்டு சாப்பிட வேண்டும் என மருத்துவர்களும் அறிவுறுத்துகின்றனர்.
பூண்டு கொத்தமல்லி சட்னி தயாரிக்கும் முறை:
சட்னி தயாரிக்க 1 கப் பிரெஷ்ஷான கொத்தமல்லி இலைகள் மற்றும் 4-5 பூண்டு பல், 2 பச்சை மிளகாய் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் உப்பு, சீரகம் சேர்த்து அரைத்து சட்னியை தயாரிக்க வேண்டும்.
2.இஞ்சி பூ மற்றும் புதினா சட்னி
இஞ்சி மற்றும் புதினா இரண்டுமே இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொழுப்பைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இஞ்சி சாப்பிடுவது எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் குறைகிறது. மேலும், புதினாவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
இஞ்சி புதினா சட்னி தயாரிக்கும் முறை:
சட்னி தயாரிக்க 1 கப் புதிய புதினா இலைகள், அரை கப் கொத்தமல்லி இலைகள், 1 அங்குல இஞ்சி, 2 பச்சை மிளகாய் ஆகியவற்றை 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து அரைத்து சட்னி தயார் செய்ய வேண்டும்.
3.வெங்காயம் தக்காளி சட்னி
தக்காளியில் உள்ள லைகோபீன் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் எல்டிஎல் கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்டது. வெங்காயமும் பூண்டைப் போலவே, இதய ஆரோக்கியத்திற்கு நனமை பயக்கும். இதில் கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் உள்ளது
வெங்காயம் தக்காளி சட்னி தயாரிக்கும் முறை:
சட்னி தயாரிக்க 2 நடுத்தர அளவிலான தக்காளி, 1 சிறிய வெங்காயம், பூண்டு 3-4 பல் எடுத்துக் கொள்ளவேண்டும்.1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை சூடாக்கி 1 டீஸ்பூன் சீரகம், 2 பச்சை மிளகாய், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து, வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கவும். மென்மையாகும் வரை சமைத்து, அது ஆறியதும், சட்னியாக அரைக்கவும். இந்த சட்னி கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்.
மேற்கூறிய சட்னி வகைகளை செய்து நாம் சாப்பிடும் போது நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் மறைந்து உடல் ஆரோக்கியம் பெறுகிறது.