ஆரோக்கியத்தின் ரகசியம்: முத்தான 3 சக்திவாய்ந்த மூலிகை தேநீர் வகைகள்!

The secret of health
முசுமுசுக்கை தேநீர்
Published on

தேநீர் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். சளி இருமலை போக்கி உடலுக்கு புத்துணர்ச்சி தரும் 3 மூலிகை டீ வகைகளை இதில் காண்போம். 

முசுமுசுக்கை தேநீர்

தேவையான பொருட்கள்:

முசுமுசுக்கை இலைகள் -ஒரு கைப்பிடி

காய்ச்சிய பால் -100 மில்லி

தேன்- ஒரு தேக்கரண்டி

மிளகுத்தூள்- சிறிதளவு

செய்முறை:

முசு முசுக்கை இலைகளை ஒன்றரை டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டவும். அதனுடன் 100 மில்லி காய்ச்சிய பால், ஒரு தேக்கரண்டி தேன், சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து  அருந்தவும். 

சளி, இருமல், அலர்ஜிக், மூச்சுத் திணறல், ஆஸ்துமா ஆகியவற்றை குணப்படுத்தும்.

வல்லாரை தேநீர்

தேவையான பொருட்கள்:

வல்லாரை இலைகள்- ஒரு கைப்பிடி

பனைவெல்லம் -தேவையான அளவு

தேன் -சிறிதளவு 

காய்ச்சிய பால் -100மில்லி

ஏலக்காய் பொடி-2சிட்டிகை

The secret of health
வல்லாரை தேநீர்youtube.com

செய்முறை:

ல்லாரை இலைகளை சுத்தம் செய்து, ஒரு டம்ளர் நீரில் நன்கு கொதிக்க விட்டு வடிகட்டவும். வடிகட்டியவற்றுடன் ஏலப்பொடி, காய்ச்சிய பால், பனைவெல்லம், சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி தேனும் கலந்து பருகவும். 

மூளைத்திறனை அதிகரிக்கச் செய்யும். ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும். மறதி நோய் வராமல் தடுக்கும். சர்க்கரை வியாதிக்காரர்களின் நரம்புத் தளர்ச்சி நோயை குணமாக்கும். அதிகளவு இரத்த சர்க்கரையை சமநிலைக்கு கொண்டுவரும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலை சரி செய்யும். 

ஆவாரம் பூ தேநீர்

தேவையான பொருட்கள் :

ஆவாரம்பூ- ஒரு கைப்பிடி

ஏலக்காய்- 2 

பட்டை -சிறிய துண்டு 

காய்ச்சிய பால் -100மில்லி

சர்க்கரை - தேவையான அளவு

The secret of health
ஆவாரம் பூ தேநீர்youtube.com

செய்முறை:

வாரம் பூவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஏலக்காய், பட்டையைத் தட்டிப் போட்டு நன்றாக கொதிக்க விடவும். கொதித்த பின்னால் வடிகட்டி அதனுடன் காய்ச்சிய பால், சர்க்கரை கலந்து அருந்தவும். 

சிறுநீர் சரியாக பிரியாமை, சிறுநீர் தாரை எரிச்சல், சிறுநீர் கழிக்க கஷ்டமாக இருத்தல்,  ஆகியவை சரியாகும். சர்க்கரை வியாதி கட்டுக்குள் வரும். மேலும் இவர்களின் கால் எரிச்சல் குணமாகும். தோல் நோய்கள், உடல் அரிப்பு ஆகியவை குணமாகும். உடலில் இருக்கும் அதிகப் படியான கொழுப்பைக் கரைக்கும். 

இந்த முத்தான மூன்று தேநீர்களையும் அருந்தி வந்தால் உடல் சுகம் பெறும்.

-இந்திராணி தங்கவேல்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com