வித்தியாசமான சுவையில் 4 இட்லி வகைகள்!

4 types of idli with different flavors!
Variety idli
Published on

இனிப்பு இட்லி 

தேவை:

பச்சரிசி - 2 கப் 

சர்க்கரை - அரைக்கப் 

மோர் - 1 கப் 

முந்திரி, திராட்சை -  தேவைக்கேற்ப 

ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன் 

நெய் - 2 ஸ்பூன் 

தேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன் 

செய்முறை: 

பச்சரிசியை ஊறவைத்து, கெட்டியாக அரைத்து, மோர் சேர்க்கவும். அதில் சர்க்கரை, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் கலந்து, எட்டு மணி நேரம் கழித்து இட்லிகளாக வார்க்கவும். இந்த இனிப்பு இட்லி எல்லோருக்கும் பிடிக்கும். 

மசாலா இட்லி 

தேவை: 

இட்லி மாவு - 6 டம்ளர் 

உருளைக்கிழங்கு - 2

பெரிய வெங்காயம் - 1 

கேரட் - 1 

பீன்ஸ் - 6

இஞ்சி துருவல் -1 ஸ்பூன் 

தேங்காய் துருவல் - அரை கப் 

உப்பு - தேவைக்கேற்ப 

மல்லித்தழை - சிறிது 

கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க 

எண்ணெய் - 4 ஸ்பூன்

செய்முறை: 

காய்கறிகளையும், வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி வைக்கவும். தேங்காய் துருவல், உப்பு, இஞ்சி துருவல், மல்லித்தழையை கெட்டியாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தை வதக்கி, காய்கறிகளை சேர்த்து, நீர் தெளித்து, அரைவேக்காடாக வேகவைக்கவும்.

அரைத்த விழுதைக் கலந்து கிளறி, இறக்கி வைக்கவும். இட்லி தட்டுகளில் சிறிது மாவை விட்டு, காய் கலவையை மூன்று ஸ்பூன் வைத்து, பரப்பி மூடி அதன் மேல் சிறிது இட்லி மாவை ஊற்றி, மூடி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.‌ அந்த இட்லிக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்.

தயிர் இட்லி 

தேவை:

வார்த்தை இட்லிகள் -8 

தயிர் - 2 கப் 

கடுகு, உளுந்தம் பருப்பு, இஞ்சி துருவல் - தலா 1 ஸ்பூன் 

நெய் -1 ஸ்பூன் 

மல்லித்தழை - சிறிது 

செய்முறை: 

சிறு வாணலியில் நெய் விட்டு, கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து, இஞ்சித் துருவலை வதக்கி, தயிரில் போட்டு, உப்பு, மல்லித்தழை  சேர்க்கவும். இட்லிகளை ஒவ்வொன்றாக தயிரில் தோய்த்து தோய்த்து எடுத்து, வேறொரு அகன்ற பாத்திரத்தில் தனித்தனியாக வைக்கவும். இதற்கும் தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. கோடைக்கேற்ற வயிற்றுக்கு இதமான இட்லி இது.

இதையும் படியுங்கள்:
நாவூர வைக்கும் டாப் 6 சட்னி வகைகள்... நன்மைகள் என்ன?
4 types of idli with different flavors!

கட்லட் இட்லி 

தேவை:

வார்த்த இட்லிகள்- 6 

கேரட் துருவல் - 3 ஸ்பூன் 

இஞ்சி துருவல் - 1 ஸ்பூன் 

பொடிப்பொடியாக நறுக்கிய மல்லித்தழை - சிறிது

செய்முறை: 

இட்லிகளின் இருபுறமும், கேரட் துருவல், இஞ்சித் துருவல், மல்லித்தழை, உப்பு கலந்த கலவையை வைத்து, பரப்பி நன்கு அழுத்தவும். இட்லிகளுடன் கலவை ஒட்டிக் கொண்டதும், 2 அல்லது 4 துண்டுகளாக நறக்கவும். தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு, இட்லி துண்டுகளை போட்டு புரட்டி எடுக்கவும். சுவையான கட்லெட் இட்லி தயார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com