
பெண்களோ, ஆண்களோ வேலையை முடித்து வீட்டுக்கு வந்தவுடன் சமையலுக்கு என்ன செயவதென்று தெரியாமல் இருப்பதே பலருக்கும் பெரிய கவலை. இல்லத்தரசிகளுக்கும் தினமும் ஒரே சட்னியே செய்து போர் அடித்திருக்கும். சமீப காலமாகவே இணையத்தை பார்த்து மக்கள் புதுபுதுவிதமாக டிஷ் செய்து அசத்தி வருகின்றனர். அப்படி நீங்கள் கவலையில்லாமல் தினசரி செய்ய டாப் 6 வகை சட்னிகள் மற்றும் அதன் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இந்த சட்னி வகைகள் நிச்சயமாக வித்தியாசமான டேஸ்டிலும், தனித்துவமானதாகவும் இருக்கும். கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!
மிளகாய் சட்னி:
பொதுவாக பலரும் காய்ந்த மிளகாயை தான் சட்னிக்கு பயன்படுத்துவார்கள். பச்சை மிளகாய் சட்னி செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். அதிக காரம் விரும்பாதவர்கள் இதில் சிறிதளவு வெல்லம் சேர்த்தால் நன்றாக இருக்கும். பச்சை மிளகாய் சட்னி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. எடையையும் குறைக்க உதவுகிறது. பச்சை மிளகாயில் வலியை குறைக்க உதவும் கேப்சைசினும் உள்ளது.
கொய்யா சட்னி:
சட்னி வகைகளிலேயே வித்தியாசமானது கொய்யா சட்னி தான். கொய்யாவில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், செரிமான கோளாறுகளை சரி செய்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
பூண்டு சட்னி:
பூண்டு சட்னி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. செரிமான பிரச்சனைகளை தீர்க்கிறது. மேலும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அழற்சி பிரச்சனைகளை தடுக்கவும் உதவுகிறது.
மாங்காய் சட்னி:
மாங்காய் சட்னி மிகவும் சுவையான ஒன்று. மாங்காயில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகின்றன.
புளி சட்னி:
புளி சட்னி செரிமானத்திற்கு உதவுகிறது. இது ஒரு இயற்கை மலமிளக்கியாக செயல்படுகிறது. மலச்சிக்கலை நீக்கி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
குருதிநெல்லி சட்னி (Cranberry chutney):
குருத்நெல்லி சட்னியில் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளன. இது சிறுநீர் பாதை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், தொற்று நோய்களை எதிர்த்து போராடவும் உதவுகிறது.