வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய 5 சத்தான லட்டுகள்!

Nutritious Laddus...
healthy foodsImage credit - youtube.com
Published on

வேர்க்கடலை லட்டு

தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை - 1 கப்

வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை - 3/4 கப்

ஏலத்தூள் - 1 டீஸ்பூன்.

செய்முறை:

வேர்க்கடலையை நண்டு வறுத்து சூடு ஆறியதும் தோல் நீக்கி, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். அதன் பின் வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். அதன் பின்னர் ஒரு தட்டில் வைத்து ஏலத்தூள் கலந்து பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். சத்தான வேர்க்கடலை லட்டு ரெடி.

 பொட்டுக் கடலை மாவு லட்டு

 தேவையான பொருட்கள்:

பொட்டுக்கடலை மாவு - 2கப் .

பொடித்த சர்க்கரை - 11/2 கப்.

நெய் - 1/2 கப்

முந்திரி உடைத்தது - 2 டீஸ்பூன்.

 செய்முறை:

வாணலியில்  பொட்டுக் கடலையை லேசாக வறுத்து ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும். சல்லடையில் சலிக்கவும். பொடித்த சர்க்கரையை பொட்டுக்கடலை மாவுடன் கலந்து கொண்டு, நெய்யில் வறுத்த முந்திரியை மாவில் கலந்து, மிதமான சூட்டில் நெய் ஊற்றி ஏலத்தூள் கலந்து சூடாக இருக்கும்போதே உருண்டை பிடிக்கவும். சத்தான பொட்டுக்கடலை லட்டு ரெடி.

திணை மாவு லட்டு

தேவையான பொருட்கள்:

திணை அரிசி - 1 1/2 கப்

வெல்லம் - 1 கப்

நெய் - 1/2 கப்

முந்திரி, பாதாம், வால் நட்

- 1 கப்

செய்முறை:

திணை அரிசியை கழுவி காயவைத்து, வாணலியில் லேசாக வறுத்து ஆறியபின் மிக்ஸியில் போட்டு பொடி செய்து சலிக்கவும். சலித்த பொடியுடன், வெல்லம் சேர்த்து கலந்து  பொடிக்கவும். பொடித்த பொடியில் நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம்,  வால்நட்  துண்டுகள் கலந்து சூடான நெய் சேர்த்து, பிடித்து உருண்டைகளாக உருட்டி  பிடிக்கவும். சத்தான திணை அரிசி மாவு லட்டு ரெடி.

இதையும் படியுங்கள்:
ரசகுல்லாவிற்காக இரண்டு மாநிலங்கள் சண்டைப் போட்டுக் கொண்ட கதை தெரியுமா?
Nutritious Laddus...

அவல்   வேர்க்கடலை லட்டு

தேவையான பொருட்கள்:

வறுத்த வேர்க்கடலை - 1 கப்.

அவல் - 1/2 கப்

வெல்லம் - 1/2 கப்

ஏலத்தூள் - 1 டீஸ்பூன்

நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து வேர்க்கடலை, அவலை தனித் தனியாக வறுக்கவும். மிக்ஸியில் அவலை பொடி செய்து வைக்கவும். வேர்க்கடலையை தோல் நீக்கி மிக்ஸியில் பொடிக்கவும்.

வெல்லத்தையும் பொடித்து, மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் இரண்டு நிமிடங்கள் ஓட விட்டு வெளியே எடுத்து, இதனுடன் ஏலத்தூள், நெய் சேர்த்து நன்கு கலந்து பிசைந்து உருண்டையாக பிடித்து கொள்ளவும். சத்தான அவல் வேர்க்கடலை லட்டு ரெடி.

உளுந்து லட்டு

தேவையான பொருட்கள்:

உளுந்து-  2 கப்

சர்க்கரை - 1 கப்

ஏலத்தூள் - 1 டீஸ்பூன்

முந்திரி - சிறு துண்டுகள் 10. (உடைத்தது)

நெய் - கால் கப்

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து சிறிய தணலில் உளுத்தம் பருப்பை சிவப்பாக வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக பொடிக்கவும். பின் சலித்து, அதனுடன் சர்க்கரை பொடித்ததை கலந்து நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு, ஏலத்தூள்சேர்த்து கலந்து சூடான நெய்விட்டு கலந்து   சூட்டுடன் சிறு  உருண்டைகளாக உருட்டி வைக்கவும். சத்தான எலும்புக்கு வலு சேர்க்கும் உளுந்து லட்டு ரெடி.

அனைத்து சத்தான லட்டுகளையும் செய்து பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ருசித்து சாப்பிடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com