சமையலுக்கு ருசி சேர்க்கும் 5 விசேஷப் பொருட்கள்!

health tips
health tips
Published on

1. ஈஸ்ட்
புளிக்க வைத்து மென்மைத் தரும் ஈஸ்ட் உலர்ந்த பருவத்தில் விற்கப்படுகிறது. இதை வெதுவெதுப்பான நீரில் சிறிது சர்க்கரை கலந்து வைத்து ஐந்து நிமிடம் கழிந்ததும் நுரைத்துக் கொண்டிருக்கும். 3 கப் மைதாவுக்கு கால் டீஸ்பூன் ஈஸ்ட் என்ற விகிதத்தில் சேர்க்கலாம்.  ஈஸ்ட் கலந்த மாவை நான்கு மணி நேரம் கழிந்த பின் பார்த்தால் நன்கு எழும்பி ரொட்டி போன்று இருக்கும். இட்லி மாவு புளிக்காத போதும் சிறிது ஈஸ்ட் கலந்து அடுப்பு பக்கம் அல்லது எலக்ட்ரிக் ஸ்டெபிலைசர் மீது வைத்தால் இட்லி மாவு பொங்கி நன்றாக இருக்கும். ஈஸ்ட் வெகு சில நாட்களில் அதனுடைய தன்மையை இழந்தவிடும். என்பதால் அதிக அளவில் வாங்கி சேமித்து வைக்ககூடாது. மேலும் ஒரே தட்பவெப்ப நிலையில் வைத்திருக்க வேண்டும்.

2. சைனா கிராஸ்
வழவழப்பான தன்மை தரும் சைனா கிராஸ், அகர் ஜெலட்டின் போன்றவை கடல் பாசியிலிருந்து தயார் செய்யப்படுபவை. ஐஸ்கிரீம் மற்றும் பழ ஜெல்லிகள், புட்டிங் ஆகியவற்றில் உபயோகப்படுத்தலாம். இதையும் வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து கரைத்துக் கொள்ளலாம். சர்க்கரையுடன் சேர்த்து அடித்து இதில் செய்யும் இனிப்பான ஜவ்வு மிட்டாய்கள் குழந்தைகள் விரும்புவார்கள்.

3. சீஸ்

பாலிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பாலாடை நல்ல ஊட்டச்சத்து உடையது. பலம் குறைவான குழந்தைகள் சீஸ் சாப்பிட்டால் ஊட்டம் நிறைந்தவர்களாக திகழ்வார்கள். பிரட் சூப் கிரேவி போன்றவற்றில் சேர்த்து அவற்றின் சுவையை கூட்டுவதற்கு உபயோகப்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
காலையில் வெறும் வயிற்றில் துளசி நீர் பருகுவதால் உண்டாகும் பயன்கள் தெரியுமா?
health tips

4. வினிகர்

புளிப்பு சுவை கொண்ட வினிகர் வெள்ளை நிறத்திலும் கருப்பு நிறத்திலும் கிடைக்கிறது.  ஊறுகாய் வகைகள் தயாரிக்கும்போது தேவையான அளவு சேர்த்துக் கொண்டால் சீக்கிரம் கெடாது என்பதுடன் ருசியும் மாறுபடும். வினிகர் கலந்த நீர் கொண்டு பாத்திரம் துலக்க  பளிச்சென்று இருக்கும். காய்கறி சாலட் செய்யும் போது ஒரு தேக்கரண்டி வினிகர் சேர்த்தால் காய்கறிகள் சுவையுடன் இருக்கும். ஆனால் வினிகர் அதிகம் உபயோகித்தால் உடல் நலம் பாதிக்கும் என்பதால் இரசாயன கலவையான வினிகரை குறைவாக பயன்படுத்தி பதிலாக இயற்கை நமக்கு தந்திருக்கும் வரப்பிரசாதமான எலுமிச்சம் பழச்சாறை உபயோகிப்பது சிறந்தது.

5. ஆப்பச்சோடா  உப்பு 
மாவுகளை புளிக்க வைக்க உதவும் ஓா் உலா் புளிப்பேற்றிதான் இந்த ஆப்பசோடா.  இட்லி மாவு அல்லது பிசைந்த மாவு இவற்றோடு சமையல் சோடாவைச் சேர்க்கும்போது அமில-கார வினையை நிகழச்செய்து காா்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றச் செய்கிறது. இவ்வாறு காா்பன்-டை-ஆக்சைடு வாயு வெளியேறும் போது ஏற்படும் காற்றுக்குமிழ்களால் ஈர மாவு புளிப்பேற்றம் அடைந்து நொதித்தல் முறையில் மென்மையும் அடைகிறது.  இந்த உப்பு ஆப்பம், இட்லி, பஜ்ஜி மற்றும் பல உணவு வகைகளில் பயன் படுத்தப்படுகிறது. ஈஸ்ட் போல என்றாலும் இதன் தன்மை மாறுபட்டது. இதை அதிகம் சேர்த்தால் உணவில் உள்ள சத்துப் பொருட்களை அழித்துவிடும் தன்மை உடையது என்பதால் தவிர்க்க முடியாத சமையலில் மட்டும் சேர்ப்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com