சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய 6 ஆரோக்கிய உணவுகள்!

healthy foods...
healthy foods...
Published on

ர்க்கரை நோய் என்றதுமே நம் நினைவுக்கு முதலில் வருவது உணவு கட்டுப்பாடுதான். ஆசையாக விரும்பி சாப்பிட்ட உணவுகளை சாப்பிடவே முடியாத நிலைதான் சர்க்கரை நோயாளிகளுக்கு. அதிலும் அரிசி உணவை அளவோடுதான் சாப்பிட வேண்டும்.

சாப்பிட்ட உணவுகளையே சாப்பிட்டு போர் அடித்த சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய  6 உணவுகள் இதோ:

கடலை மாவு ஊத்தப்பம்:

காலை நேரத்திற்கு கடலைமாவுடன் புதிதாக வெட்டிய காய்கறிகளுடன் செய்யப்படும் ஊத்தப்பம் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக அமையும். ஆனால் குறைந்த எண்ணெய் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.

சிறுதானிய இட்லி: 

பல வகையான சிறுதானியாங்களான வரகு, திணை, கோதுமை, கேழ்வரகு, வெந்தயம் ஆகியவை கலந்து அரைக்கப்பட்ட மாவில் இட்லி ஊற்றவேண்டும். ஆவியில் வேகும் என்பதால் எண்ணெய் இல்லாத ஆரோக்கியமான காலை உணவாக இது அமையும். சிறுதானியங்கள் சர்க்கரை நோயாளிகளின் நண்பனாக உள்ளது.

வெந்தயக் கீரை பரோட்டா:

வெந்தயம், சர்க்கரை நோயாளிக்களுக்கான சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. வெந்தயக் கீரையை பொரியல் செய்து அதை கோதுமை பரோட்டாவில் பூரணமாக வைத்து செய்யுங்கள். அட்டகாசமான ஆரோக்கியமான உணவு தயார்.

பனீர் பரோட்டா:

அமெரிக்க நீரிழிவு நோய்க்கான அமைப்பு சர்க்கரை நோயாளிகளுக்கு நம் நாட்டின் பனீர்தான் சிறந்த சீஸ் வகையென கூறியுள்ளது. கொழுப்பு இல்லாத சீஸ் வகைதான் சாப்பிட உகந்தது. இதை சிறுதானிய பரோட்டாவுடன் சேர்த்து செய்து பனீர் பரோட்டாவாக சாப்பிடுங்கள்.

ஸ்பரவுட்ஸ் சாலட்:

முளைக்கட்டிய பச்சை பயிறுடன், வெங்காயம், தக்காளியுடன் தேவையான அளவு உப்பு மிளகுத்தூள் தூவி சாப்பிடுங்கள். முளைகட்டிய பயரில் அதிக அளவு புரதச்சத்து இருப்பதால்மிகவும் நல்லது.

ஓட்ஸ் ஆம்லேட்:

வெறும் ஓட்ஸ் கஞ்சியை குடிப்பதற்கு பதில் அதில் புதிதாக வெட்டப்பட்ட காய்கறிகளையும் வெங்காயம், தக்காளியுடன் முட்டை சேர்த்து செய்யப்படும் ஆம்லேட்டாக சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக இது கருதப்படுகிறது.

மேற்கண்ட உணவுகளை செய்து சாப்பிட ஆரோக்கிய வாழ்வு கிடைப்பதோடு இதுதான் சாப்பிட வேண்டுமா? என்ற நினைப்பும் அடியோடு அகழும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com