உணவுக்கு சுவையும் கவர்ச்சியான தோற்றமும் தர உதவும் 6 பொருட்கள்!

button mushroom
button mushroomhttps://rootsandleisure.com
Published on

நாம் சமைக்கும் உணவுகளுக்கு எக்ஸ்ட்ராடினரி சுவையும் மணமும் தந்து, உண்பவர் மனதில் நீண்டகாலம் நினைவில் நிற்கவும் செய்யும் 6 பொருட்கள் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவை என்னென்ன பொருள்கள் என்பதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. மாமிசம் போன்ற அசைவ உணவுக்கு சுவை கூட்ட உப்பு அதிகம் சேர்ப்பது போல் காய்கறிகளில் சமைக்கும் உணவுடன் பார்ஸ்லி என்ற மூலிகை சேர்க்கும்போது உணவின் சுவை வேற லெவலுக்குச் செல்லும். பார்ஸ்லியிலுள்ள குறைந்த அளவு காரத் தன்மையானது சூப், ஸ்டூ மற்றும் சாலட் போன்றவற்றின் மணம் மற்றும் சுவையை அதிகரிக்கச் செய்யயும். ஃபிரஷ் பார்ஸ்லியின் பச்சை நிறம் கண்களுக்கு கவர்ச்சி விருந்தாகும்.

2. சூப், ஸ்டூ மற்றும் சாஸ் போன்ற உணவுகளில் ஷீடேக், போர்சினி அல்லது பட்டன் மஷ்ரூம் சேர்த்து செய்யும்போது அதன் உமாமி (Umami) சுவையானது அந்த உணவின் சுவையை பல மடங்கு அதிகரிக்கச் செய்யும். இந்த மஷ்ரூம்களை கிரில் அல்லது ரோஸ்ட் செய்து வெஜ் அல்லது நான்-வெஜ் உணவுகளுடன் சேர்த்து சுவையை கூட்டச் செய்யலாம்.

3. டிரஃபிள்ஸ் (Truffles) எஸ்ஸன்ஸுடன் ஆயில் சேர்த்து அந்த கலவையை பாஸ்தா, ரிசோட்டோ மற்றும் பொரித்த உணவுகளின் மீது சில துளிகளை சேர்த்து முடிக்க, அந்த உணவுகள் லேசான பூண்டின் சுவை கொண்டதுபோல அதி நவீன டேஸ்ட் பெற்றுவிடும்.

4. உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றதும் விலை அதிகமானதுமான குங்குமப் பூவை (Saffron) ஒரு சிட்டிகை எடுத்து பேல்லா (Paella), ரிசோட்டோ மற்றும் பிரியாணி போன்ற உணவுகளில் சேர்க்க, அந்த உணவுகளின் தரமும் சுவையும் எட்ட முடியாத உயரத்தை அடைந்துவிடும். குங்குமப்பூ தரும் நிறமும் சுவையும் வேறு எந்த ஸ்பைஸ் உயோகித்தாலும் தர இயலாது.

இதையும் படியுங்கள்:
கட்டாயம் தவிர்க்க வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் உணவுகள்! 
button mushroom

5. தென் கிழக்கு ஆசியாவின் முக்கியமானதொரு சமையல் பொருள் ஃபிஷ் சாஸ். இதை ஸ்டிர் ஃபிரை மற்றும் உணவுகளை மரினேட் (Marinade) செய்யும்போது சேர்த்தால் உப்பு டேஸ்ட் கொண்ட அவற்றின் உமாமி சுவை ஆழ்கடல் அளவிற்கு அதிகரிக்கும். நொதிக்கச் செய்த மீன்கள் மூலம் தயாரிக்கப்படும் இந்த சக்தி வாய்ந்த சுவையூட்டியை மிகக் குறைவான அளவிலேயே உபயோகிக்க வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட இந்த சாஸ், இனிப்பு, புளிப்பு, ஸ்பைசி என எதனுடனும் சேர்ந்து சுவையை சமநிலைப்படுத்தச் செய்யும்.

6. ஹம்முஸ், தஹினி சாஸ் மற்றும் சாலட் ட்ரெஸ்ஸிங்கில் சேர்க்கப்படுவது எள்ளு பேஸ்ட். இது உணவுகளுக்கு உயர்தர சுவையும் மெலிதான டெக்ச்சரும் மணமும் தரக்கூடியது. இது பலவிதமான பாரம்பரிய உணவுகளின் ரெசிபிகளில் அடிப்படைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com