டீயுடன் சாப்பிட 6 விதமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

pakodas to eat with tea!
pakkoda recipes
Published on

பாலக் பக்கோடா

தேவையானவை: பொடியாக நறுக்கிய பாலக்கீரை – 1 கப்,  உருளைக்கிழங்கு –1/2 பொடியாக நறுக்கியது, கடலைமாவு – 150 கிராம், அரிசிமாவு – 50 கிராம், பச்சை மிளகாய் – 4, நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.

செய்முறை:

நறுக்கிய பாலக்கீரை, உருளைக்கிழங்கு, கடலைமாவு, அரிசிமாவு, உப்பு ஆகியவற்றுடன் அரைத்த பச்சை மிளகாயை சேர்த்து, நெய்விட்டு பிசிறி, தண்ணீர் விட்டு கெட்டி யாகக் கலந்து கொள்ளவும். எண்ணெயை காய வைத்து, மாவை அதில் கிள்ளிப்போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

எள் பக்கோடா

தேவையானவை: கறுப்பு எள் – 50 கிராம், காய்ந்த மிளகாய் – 5, மைதாமாவு – 150 கிராம், அரிசி மாவு – 50 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் பொரிக்க தேவையான அளவு.

செய்முறை:

எள்ளை வெறும் கடாயில் வறுத்து அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்துப் பொடிக்கவும். அதில் மைதாமாவு, அரிசிமாவு, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, தண்ணீர்விட்டு கெட்டியாகக் கலக்கவும். எண்ணெயை காய வைத்து, கலந்த மாவை அதில் கிள்ளிப்போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

மிக்ஸ்டு வெஜிடபிள் பக்கோடா

தேவையானவை: நீளவடிவில் நறுக்கிய காய்கறிகள் (கேரட், பீன்ஸ், கோஸ், வெங்காயம், குடமிளகாய்) – ஒரு கப், கடலை மாவு, சோளமாவு – தலா 50 கிராம், அரிசிமாவு – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் –1/4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.

செய்முறை:

நீளவாக்கில் நறுக்கிய காய்கறிகளுடன் கடலைமாவு, சோளமாவு, அரிசிமாவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசிறி, பின்னர் சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகக் கலக்கவும். இந்த மாவை காயும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கற்பூரவள்ளி துவையல்
pakodas to eat with tea!

புளிப்பு பக்கோடா

தேவையானவை: துருவிய மாங்காய் – 4 கப், பச்சை மிளகாய் – 4, கறிவேப்பிலை – சிறிதளவு, கடலைமாவு – ஒரு கப், அரிசிமாவு – கால் கப், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.

செய்முறை:

பச்சை மிளகாய், கறிவேப்பிலை இரண்டையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அதனுடன் துருவிய மாங்காய், உப்பு, பெருங்காயத்தூள், கடலை மாவு, அரிசிமாவு சேர்த்து கெட்டியாகக் கலந்து காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

நெல்லிக்காய் பக்கோடா

தேவையானவை: துருவிய நெல்லிக்காய் – அரை கப், கோதுமைமாவு, கடலைமாவு – தலா கால் கப், அரிசிமாவு – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், சாட் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – சிறிதளவு, எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.

செய்முறை:

துருவிய நெல்லிக்காயுடன் அரிசிமாவு, கடலைமாவு, கோதுமைமாவு, சாட் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு (சாட் மசாலாத்தூளில் உப்பு இருக்கும்) சேர்த்து, தண்ணீர்விட்டு கெட்டியாகக் கலக்கவும். மாவை காயும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
சுவையான மரவள்ளிக்கிழங்கு மசால் வடை - சோயா சுக்கா செய்யலாமா?
pakodas to eat with tea!

பனீர் பக்கோடா

தேவையானவை: பனீர் துண்டுகள் – சிறிதளவு, மைதா மாவு – கால் கப், தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன், சில்லி சாஸ், சோயா சாஸ், சோளமாவு – தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.

செய்முறை:

மைதாமாவு, சோளமாவுடன் அனைத்து சாஸ்களையும் சேர்த்து, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்துக்கலந்து, கடைசியாக பனீர் துண்டுகளை சேர்த்துப் பிசிறி எடுக்கவும். இந்த மாவை காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com