கோடையை சமாளிக்க உதவும் கொரிய மக்களின் 8 வகை ஆரோக்கிய பானங்கள்...நாமும் செய்துதான் பருகுவோமே!
பல காலமாக அருந்தப்பட்டு வரும் இந்த பானம் நொதிக்கச் செய்த மால்ட் மற்றும் அரிசி சாதம் கொண்டு தயாரிக்கப்படுகிறது. லேசான இனிப்பு சுவை மற்றும் மால்டி மணம் கொண்டது. இது செரிமானத்துக்கு உதவுவதுடன் உடலை உள்ளும் புறமும் குளிர்ச்சியடையச் செய்யும்.
பிளாக் ராஸ்பெரி பழத்திலிருந்து தயாரிக்கப்படும் இந்த ஜூஸ் சிறிது புளிப்பு, இனிப்பு இரண்டும் கலந்த சுவை கொண்டது. இதிலுள்ள அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், இரத்த ஓட்டம் சிறப்பாக நடைபெற உதவும். வேர்வை அதிகம் வெளியேறும் கோடை காலங்களில் சக்தியின் அளவு குறையாமல் பாதுகாக்க உதவும் இந்த ஜூஸ்.
யுஜா என்ற மணம் மிக்கதொரு சிட்ரஸ் பழத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது இந்த டீ. இதனுடன் சிறிது தேன் மற்றும் ஐஸ் க்யூப் சேர்த்து அருந்தும் போது, மனம் விரும்பும் இதமானதொரு புத்துணர்ச்சி பானம் அருந்திய திருப்தி உண்டாகும். வைட்டமின் C நிறைந்த இந்த பானம் இயற்கை முறையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
மங்களகரமான மஞ்சள் நிறம் கொண்ட இந்த க்ரீமி மில்க் மரபு வழி மரியாதை பெற்றது. நாடு முழுவதும் கிடைக்கக் கூடியது. பொட்டாசியம் சத்து நிறைந்தது. இதில் நீர்ச்சத்து அதிகம் இல்லாத போதும், கோடையில் வெய்யிலில் செல்பவர்கள் விரும்பி அருந்துகின்றனர்.
அதிக சுவையுடையது. 'ஒமிஜா' என்றால் ஐந்து சுவை என்று பொருள். பெயருக்கு ஏற்றாற்போல், இதில் இனிப்பு, புளிப்பு, கசப்பு, உப்பு, காரம் என ஐந்து சுவைகளும் அடங்கியுள்ளன. மங்கோலியன் பெரி வகைப் பழங்களிலிருந்து இந்த டீ தயாரிக்கப்படுகிறது. இந்த டீயை குளிர்ச்சியூட்டி அருந்தும் போது உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறும். கூர்நோக்கு சக்தி கூடும்.
சோடாவுடன் சிறிது பால் சேர்த்து அருந்தும் இந்த பானம் 'மில்கிஸ்' எனப்படுகிறது. நுரையுடன் கூடிய க்ரீமி மில்கிஸ் லேசான இனிப்புடன், மகிழ்ச்சியும், வேடிக்கையும் தரும் ட்ரிங்க். வெவ்வேறு வகையான பழச் சுவையுடனும் இது கிடைக்கும். தாகத்தை தீர்க்க வல்லது.
பார்லி என்ற தானியத்தை சிவக்க வறுத்து கொதிக்கும் நீரில் போட்டு பதினைந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு அதிலிருந்து தயாரிக்கப்படுவது BORI-CHA. இந்த டீயை வருடம் முழுவதும் அருந்தலாம். கோடை காலத்தில் ரெஃப்ரிஜிரேட்டரில் வைத்து குளிரூட்டியும், மற்ற காலங்களில் சூடாகவும் குடிக்கலாம். சுவையும் சத்துக்களும் நிறைந்தது.
ஆலுவேரா ஒரு குளிர்ச்சி தரும் தன்மை கொண்ட மூலிகை. இதன் உள் பகுதி சதையை எடுத்து ஜூஸ் போட்டு அருந்தினால், சிறிது இனிப்பான, நீரேற்றம் தரக்கூடிய ஜூஸ் குடித்த திருப்தி உண்டாகும். சிறப்பான செரிமானத்துக்கும் ஆலுவேரா உதவி புரியும்.