சிவபெருமான் அணியும் 10 அணிகலன்கள் கூறும் வாழ்வியல் தத்துவங்கள்!

Lord Siva
Lord Siva
Published on

சிவபெருமானின் படர்ந்த ஜடாமுடியில் இருந்து, ருத்ர தாண்டவம் ஆடும் அவரது காலடி வரை, நமது வாழ்வியல் குறித்தும், பண்பு நலன்கள் குறித்தும் பல விஷயங்களை, தத்துவங்களை சூசகமாக நமக்குக் கூறுகிறது.

1. ஜடா முடி: சிவபெருமானின் நேர்க்கொண்டு உயர்ந்து காணும் ஜடாமுடியின் மூலம், ஒருமுகமாக இருக்கும் உடல், மனம் மற்றும் ஆத்மா உங்களது உடல் நிலையையும், மனநிலையையும் அதிகரிக்கச் செய்யும் மற்றும் உங்களை அமைதியான நிலையில் ஆட்கொள்ள உதவும். உங்கள் செயல்களில் ஒருமுகத்தோடு செயல்பட பயன் தரும்.

2. நெற்றிக்கண்: சிவபெருமானின் நெற்றிக்கண் நமக்கு கூறுவது என்னவெனில், நமக்குப் பின்னால் இருக்கும் பிரச்னைகளையும் எதிர்க்கொண்டு அதை தகர்த்தெறிந்து, முடியாது என்பனவற்றையும் முடித்துக்காட்ட வேண்டும் என்பதே ஆகும்.

3. திரிசூலம்: திரிசூலம் மூலமாக நாம் அறிய வேண்டியது, நமது மனது, அறிவாற்றல், தன்முனைப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்தினோம் எனில் நமது வேலைகளில் சிறந்து செயல்பட இயலும் மற்றும் தோல்விகளைத் தகர்த்தெறியலாம் என்பனவாகும்.

இதையும் படியுங்கள்:
துளசி மாலை அணியப்போகிறீர்களா? இதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்!
Lord Siva

4. ஆழ்நிலை: சிவபெருமானின் ஆழ்நிலை உருவின் மூலமாக, நாம் அமைதி மற்றும் பொறுமையைக் கையாளும்போது, நமது தினசரி பிரச்னைகளையும், கவலைகளையும் எளிதாகக் கடந்து, தெளிவான மனநிலை பெறலாம் என்பதே ஆகும்.

5. சாம்பல்: சிவபெருமானின் தேகத்தில் இருக்கும் சாம்பல் நமக்கு உணர்த்துவது, நம் வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் அல்ல, அனைத்தும் கடந்து போகும். அதனால் எதற்காகவும் மனக்கவலைப்படாமல், துயரம் கொள்ளாமல் உங்கள் தோல்விகளில் இருந்து மீண்டெழுந்து வாருங்கள் என்பதே ஆகும்.

6. நீலகண்டம்: சிவபெருமானின் நீல நிற தொண்டையின் மூலம் நாம் அறிய வேண்டியது, நமக்கு எவ்வளவு கோபம் வந்தாலும், அதை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் அதை மற்றவர் மீது திணித்து (விஷ சொற்களாக), உங்கள் நிலையை நீங்களே குறைத்துக்கொள்ளக் கூடாது என்பதே ஆகும்.

இதையும் படியுங்கள்:
திருச்செந்தூர் கோயில் கொடிமரக்கதை தெரியுமா?
Lord Siva

7. உடுக்கை: சிவபெருமானின் உடுக்கையின் மூலமாக, உங்கள் உடலின் அனைத்து எண்ணங்களையும் ஒருமுகமாக செயல்படுத்தும்போது, உங்கள் உடல் சுத்தமாகி, நோயின்றி வாழ உதவுகிறது என்பதே ஆகும்.

8. கங்கை: சிவபெருமானின் சிரசில் இருக்கும் கங்கை நமக்கு உணர்த்துவது, உங்களது அறியாமையின் முடிவில் ஒரு தேடல் பிறக்கிறது. அந்தத் தேடலில் இருந்துதான் உங்களுக்கான புதிய வழி தென்படுகிறது என்பதே ஆகும்.

9. கமண்டலம்: சிவபெருமானின் கமண்டலம் மூலம் நாம் அறிய வேண்டியது, நமது உடலில் இருந்து தீய எண்ணங்களையும், எதிர்மறை எண்ணங்களையும் தவிர்த்தோம் என்றால் நாம் நல்ல நிலையை எட்ட முடியும் என்பதே ஆகும்.

10. நாகம்: சிவபெருமானின் கழுத்தை சுற்றி இருக்கும் நாகம் மூலமாக நாம் உணர வேண்டியது, நம்முள் இருக்கும் 'நான்' எனும் அகங்காரத்தை விட்டுவிட்டால் உங்கள் மனநிலையும் மற்றும் உடல்நிலையும் மேலோங்கும் என்பதே ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com