எடை குறைய கொள்ளு உப்புமா: ஆரோக்கியமான காலை உணவு!

A healthy breakfast!
A healthy breakfast!
Published on

ம்ம தமிழ் நாடு மட்டுமல்லாமல் உலகத்தில் வாழ்கின்ற அத்தனை தமிழர்களின் வீட்டிலும் இந்த உப்புமா என்ற உணவு இல்லாமலே இருக்காது ஏழு நாளைக்கு ஏழு உப்புமா கூட பண்ணலாம் அத்தனை விதவிதமான உப்புமா இருக்கிறது.

ரவை உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை ரவை உப்புமா, சேமியா உப்புமா, அவல் உப்புமா எப்படி அடிக்கிக் கொண்டே போகலாம். சரி இந்த லிஸ்ட்டோட இப்ப இன்னொரு உப்புமாவையும் add பண்ணிக்கலாமா.. அது என்ன உப்புமா என்று கேக்குறீங்களா?? கொள்ளு உப்புமா (horse gram upma).. ஆமாங்க, இந்த கொள்ளு உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமானது. எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கொள்ளை தாராளமாக வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு எடுத்து கொள்ளலாம்.

இந்த கொள்ளு சாப்பிட்டால் அதிக நேரத்திற்கு பசி தாங்கும். மேலும் energy நிறைய கிடைக்கும். குதிரை இந்த கொள்ளை உண்பதால்தானே எப்போதும் சுறு சுறுப்பாகவே இருக்கிறது. அதனால்தான் இதை ஆங்கிலத்தில் horse gram என்றழைக்கிறார்கள். சரி, இப்ப கொள்ளு உப்புமா ரெசிபியை பார்க்கலாமா..?

கொள்ளு உப்புமா செய்முறை:

முதலில் ஒரு கப் கொள்ளு எடுத்து நன்றாக சுத்தம் செய்து வாணலியில் போட்டு எண்ணெய் ஊற்றாமல் வறுக்கவும். நன்றாக பச்சை வாசனை போகும் அளவுக்கு வறுத்த பின்பு மிக்ஸியில் போட்டு ரவை போல் அரைத்துக்கொள்ளவும். அரை கப் அரிசி உடைசல் ரவையையும் எடுத்துக் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
கத்திரிக்காய் பிரியாணி முதல் ஊறுகாய் வரை: நாவூறும் நால்வகைச் சுவை!
A healthy breakfast!

இப்போது அடுப்பில் குக்கரை வைத்து சூடான பிறகு நான்கு ஐந்து ஸ்பூன் நல்லெண்ணையை ஊற்றவும். எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு அரைத்து வைத்துள்ள கொள்ளு ரவை, அரிசி ரவை மற்றும் ஒரு கைப்பிடி பயத்தம் பருப்பையும் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாக கிளறவும்.

இத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு கப் துருவிய தேங்காயையும் சேர்க்கவும். பிறகு நான்கு அல்லது ஐந்து கப் தண்ணீரை ஊற்றி கலக்கி குக்கரை மூடிவிடவும். நான்கு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். சிறிது ஆறியப் பிறகு நன்றாக கிளறி பரிமாறவும். ரொம்ப சூப்பரா இருக்கும். அரிசி உப்புமா எப்படி இருக்குமோ அதே சுவையில்தான் இருக்கும். கொள்ளு போட்ட மாதிரியே தெரியாது. முயற்சி செய்து பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com