
முருங்கைக்கீரை வாழைப்பூ வடை
செய்ய தேவையான பொருட்கள்:
நறுக்கிய வாழைப்பூ- ஒரு கப்
முருங்கைக்கீரை நறுக்கியது- அரை கப்
கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு தலா- அரைகப்
பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் தலா- இரண்டு
சோம்பு ,சீரகம் தலா- ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- தேவையான அளவு
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப
செய்முறை:
பருப்பு வகைகளை அரைமணி நேரம் ஊறவைக்கவும். நன்கு ஊறிய உடன் அதனுடன், மிளகாய்கள் மற்றும் சோம்பு, சீரகம் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்து எடுக்கவும் .அந்த மாவுடன் உப்பு, பெருங்காயத்தூள், நறுக்கிய வாழைப்பூ, முருங்கைக்கீரை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு நன்கு வேக விட்டு எடுக்கவும்.
கதம்ப காய்கறி கொத்சு
செய்ய தேவையான பொருட்கள்:
பாசிப் பருப்பு -அரை கப்
வெங்காயம், தக்காளி தலா- ஒன்று நறுக்கியது
பரங்கி பூசணித் துண்டுகள் தலா- கால் கப்
கேரட் ,கத்திரிக்காய் தலா-ஒன்று நறுக்கியது
புளி- நெல்லிக்காய் அளவு
எண்ணெய், உப்பு -தேவைக்கேற்ப
சர்க்கரை வள்ளிக் கிழங்கு -ஒன்று நறுக்கியது
கடுகு, சீரகம், கருவேப்பிலை, கொத்தமல்லி தழை- தாளிப்பதற்கு தேவையான அளவு
வறுத்து அரைக்க:
தனியா விதை, கடலைப்பருப்பு, சீரகம் தலா- ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -ஐந்து
வெந்தயம்- கால் டீஸ்பூன்
செய்முறை:
பாசிப்பருப்புடன், மஞ்சள் தூள் காய்கறி துண்டுகள் சேர்த்து குக்கரில் குழைய வேக விடவும். புளியை தண்ணீரில் ஊறவிட்டு கரைத்து வைக்கவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் தனித்தனியே வறுத்து ஆறிய பின் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெயை காயவிட்டு கடுகு, சீரகம், கருவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கி புளிக்கரைசல் உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் பாசிப்பருப்பு கலவை, அரைத்த விழுது சேர்த்து கிளறவும் .மீண்டும் ஒரு கொதி விட்டு இறக்கி மல்லித்தழை சேர்த்து பரிமாறாவும். கமகம வாசனையுடன் அசத்தலாக இருக்கும்.