மழைக்காலத்திற்கு ஏற்ற அன்னம் மற்றும் கஞ்சிகளை சமைக்கும் முறை!

healthy food for rainy season
healthy food
Published on

நாம் அன்றாட அரிசி உணவையே உட்கொண்டு வருகிறோம். அந்த உணவை எப்படி சாப்பிட வேண்டும். எதனுடன் கலந்து சாப்பிட்டால் என்னென்ன சத்துக்கள் உடம்பில் சேரும், அதை சமைக்கும் முறை என்ன என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம். 

சரீரத்திற்கு நல்ல வன்மையை தருவது வாத பித்தங்களினாலும், பீனிசத்தாலும் விளைகின்ற நோய்களுக்கு இடம் கொடுக்காமல் காப்பது  இளம் சூடு உடைய அன்னம் புசிப்பதுதான். அதிக கடுமையான சூடு உடைய அன்னம் உண்டாள் உதிரப்பித்தம், தாகம் இவைகளை உண்டாக்கும். 

பச்சரிசி அன்னத்தை சாப்பிடுவது சரீரத்துக்கு பலம் கிடைக்கும். பித்த கோபம் முதலியவற்றை நீக்கும். 

புழுங்கல் அரிசி சாதம் வாத கோபம் முதலிய பற்பல வலிய ரோகங்கள் முதலியவற்றை வரவிடாது தடுக்கும். எல்லாவித நோயாளிகளுக்கும் சிறந்தது. குழந்தையிலிருந்து பிரசவித்த பெண்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இது.

சுத்த அன்னம் என்பது பழைய அரிசியை நன்றாகத் தீட்டி வெந்நீரில் மூன்று முறை கழுவி காயவைத்து அதை ஒரு பாத்திரத்தில், ஒரு பங்கு அரிசிக்கு மூன்று பங்கு தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்கும் தண்ணீரில் அரிசியை போட்டு பதமாக வடிக்க வேண்டும். பின்னர் வடித்த சாதத்தை அடுப்பில் சிறு தீயில் வைத்து  எடுத்து விட வேண்டும். இந்த அன்னத்துடன் நல்ல கறி வகைகளை சேர்த்து புசித்து வந்தால் வாதப்பித்த சிலேத்துமம் அனைத்தும் நீங்கி குடலில் எந்த நோயையும் அண்ட விடாமல் தடுக்கும்.

கஞ்சி:

பசும்பால் பச்சரிசி சேர்த்து காய்ச்சிய கஞ்சியை சாப்பிடுபவர்களுக்கு புத்தி அதிகரிக்கும். தாது புஷ்டிக்கு தேகம் பூரிக்கும். 

கோதுமை கஞ்சியானது வாதசுரம், ஜலதோஷம், கபம், ஜன்னிபாதம் இவைகளை விலக்கும். தேகத்திற்கு வண்மை தரும். 

கொள்ளும், அரிசியும் சேர்த்து காய்ச்சிய கஞ்சியானது அதிக பசியை உண்டாக்கி தீர்க்கும். எள்ளை கையினால் கசக்கி பிழியும் படியான பலமும், அதற்கு தக்க வீரிய விருத்தியையும் கிழவர்களுக்கும் கூட உண்டாக்கும். 

இதையும் படியுங்கள்:
விரத நாட்களில் ஆற்றல் தரும் உளுந்து கீரும், மிக்ஸட் நட்ஸ் சூப்பும்!
healthy food for rainy season

வடிக்கஞ்சி என்பது சாதத்தில் இருந்து வடிக்கப்பட்டது. அது விழிகளுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தை நீக்கும். உடலை பூரிப்படையச் செய்யும். நீர் சுருக்கை போக்கும். 

பஞ்ச முஷ்டிக் கஞ்சி என்பது துவரை, உளுந்து, கடலை, சிறுபயறு, பச்சரிசி இந்த ஐந்தையும் வகைக்கு ஒரு பிடி எடுத்து ,ஒரு பாத்திரத்தில் ரெண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாகக் காய்ச்சி, அது ஒரு பங்காக சுண்டிய பிறகு விரத நாட்களில் இதை சாப்பிடுவது நல்லது. ஆயாசம், இளைப்பு இவை நீங்கும். சோர்ந்து போனவர்களுக்கு நல்ல சுறுசுறுப்பைத் தரும். 

முடிச்சு கஞ்சி என்பது ஆழாக்கு அரிசிக்கு 2 படி தண்ணீர்விட்டு சிறிதளவு சுக்கை சீவி அதில் சேர்த்து நான்கில் ஒரு பங்காக காய்ச்சி அந்த நீரின் தெளிவை சாப்பிட வேண்டும். சகல நோயாளிகளுக்கும் கொடுக்கலாம். அதிக வெப்பத்தால் சிவந்து சிறுநீர் கழிப்பது, கண் சூட்டை நீக்குவது, குடலில் செரியாமை ஏற்பட்டிருப்பது, போன்ற அனைத்து நோய்களையும் தீர்க்கும் சக்தி படைத்தது இந்தக் கஞ்சி. 

ஆதலால் தினசரி உணவு படைக்கும்பொழுது இந்த குறிப்புகளை மனதில் வைத்து சமைத்து, உரிய நேரத்தில் பரிமாறினால் நோய் நொடிக்கு குட் பை சொல்லலாம். நல்ல உணவை உண்ட திருப்தி கிடைக்கும். மழைக்காலத்திற்கு தேவையான சக்தியையும் இந்த கஞ்சி, சாத வகைகள் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com