விரத நாட்களில் ஆற்றல் தரும் உளுந்து கீரும், மிக்ஸட் நட்ஸ் சூப்பும்!


Uludu Keeru and Mixed Nuts Soup to give you energy on fasting days!
Variety juices...Image credit - youtube.com
Published on

பெரும்பாலோர் விரதம் இருக்கும் நாட்களில் உற்சாக பானமாக என்ன அருத்துவது என்று சிந்திப்பார்கள். வயிறு காலியாக இருக்கும்போது உடலுக்கு உடனடி உற்சாகம், ஆற்றல் தரக்கூடிய இரண்டு பான வகைகளை இங்கு பார்ப்போம்.

உளுந்து, மிகவும் சத்தான பருப்பு. இதில் புரதம், வைட்டமின் பி, ரிபோஃப்ளேவின் ஸ்டார்ச், நார்ச்சத்து,  மற்றும் கால்சியம் உள்ள இது, இதயத்திற்கு மிகவும் நல்லது. மேலும் கொழுப்பைக் குறைத்து இரத்த ஓட்டத்தில் மெக்னீசியம் மற்றும் ஃபோலியேட் அளவை உருவாக்க உதவுகிறது, இதனால் செல்களில் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. இதில் கீர் செய்து அருந்தி பல நன்மைகள் பெறலாம்.

உளுந்து கீர்

தேவையானவை:
கருப்பு உளுந்து-  கால் கப்
வெல்லம் அல்லது கருப்பட்டி - கால் கப் கெட்டிப்பால்-  ஒன்றரை கப்
ஏலக்காய் - 10
தேங்காய் நறுக்கியது - ஒரு ஸ்பூன்
 
செய்முறை:

கருப்பு உளுந்தை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து மிக்ஸியில் நைசாக பொடிக்கவும். பாலுடன் இந்த மாவை சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கிளறி அடுப்பில் வைத்து மேலும் கட்டியாகாமல் கிளறி கொதிக்கவிட்டு இறக்கவும். வெல்லம் அல்லது கருப்பட்டியை துருவி அதில் சிறிது நீர் சேர்த்து அடுப்பில் வைத்து சூடாக்கி கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைக்கவும். அது கொதித்து வரும்போது உளுந்து பால் கலவையை சேர்த்து நன்கு கிளறி அத்துடன் ஏலக்காய் தூள் மெலிதாக நறுக்கிய தேங்காய் துண்டுகளை போட்டு இறக்கவும். இந்த கீர் சூடாகவும் அருந்தலாம் அல்லது ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து "ஜில்"லென்றும் அருந்தலாம்.

மிக்ஸட் நட்ஸ் சூப்

வேர்க்கடலையில் புரதங்கள், எண்ணெய் மற்றும் நார்ச்சத்துகள் மிகுந்த அளவில் உள்ளதால் சரும ஆரோக்கியம் மற்றும்  காயங்களை குணப்படுத்தும் செயலிலும் உதவுகிறது.  இது நன்மை தரும்கொழுப்பு வகையை சேர்ந்ததால் நம் உணவில் அடிக்கடி எடுக்கலாம். இதனுடன் பாதாம் முந்திரி சேர்த்து செய்யும் சூப் உடலுக்கு புத்துயிர் தரும்.

இதையும் படியுங்கள்:
அல்டிமேட் டேஸ்டில் நரிப்பயறு வடை- முறுக்கு குழம்பு ரெசிபிஸ்!

Uludu Keeru and Mixed Nuts Soup to give you energy on fasting days!

தேவையானவை:
பச்சை வேர்கடலை - கால் கப்
பாதாம் ,முந்திரி தலா- ஆறு
பால் - ஒன்றரை கப்
நறுக்கிய ப்ராக்கோலி - கால் கப் மிளகுத்தூள் உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

பாதாம் பருப்புகளை வெந்நீரில் 2 மணி நேரம் ஊறவைத்து தோலை உரித்து கொள்ளவும். இதனுடன் பச்சை வேர்க்கடலை, முந்திரி, கால் கப் பால் சேர்த்து மையாக அரைக்கவும். பொடியாக நறுக்கிய ப்ராக்கோலி துண்டுகளுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். ஐந்து நிமிடங்களில் புராக்கோலி வெந்ததும் அடுப்பை அணைத்து மூடிவைத்து நன்கு ஆறியதும், இத்துடன் மீதம் உள்ள பால், அரைத்த பாதாம் கலவை, தேவையான உப்பு மிளகுதூள் சேர்த்து மீண்டும் அடுப்பில் வைக்கவும். எல்லாம் ஒன்றாக சேர்ந்து நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைக்கவும். இந்த சூப் சூடாக குடித்தால் சூப்பராக இருக்கும். முந்திரி பாதாம் நிலக்கடலை கெட்டித்தன்மை தரும் என்பதால் பால் அல்லது சிறிது நீர் கலந்து நீர்க்க இருக்க வேண்டும். இதில் காலிபிளவரும் சேர்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com