எலும்பிற்கு வலிமை கொடுக்கும் பிரண்டை! வித்தியாசமான இரண்டு ரெசிபிக்கள்!

பிரண்டை பொடி
பிரண்டை பொடிImage credit - youtube.com

பிரண்டை பொடி

தேவையான பொருட்கள்:

இளம் பிஞ்சு பிரண்டை_ ¾ கிலோ

நல்லெண்ணெய் _4 ஸ்பூன்

புளி _பெரிய நெல்லிக்காய் அளவு

வற்றல் _20

பூண்டு _20 பற்கள்

கருவேப்பிலை_1 கைப்பிடி

உளுத்தம்பருப்பு_150 கிராம்

கடலைப்பருப்பு _50 கிராம் கறுப்பு

எள் _50 கிராம்

பச்சரிசி _4 ஸ்பூன்

நல்ல மிளகு _1 ஸ்பூன்

பெருங்காயத்தூள் _1 ஸ்பூன்

கல் உப்பு _தேவைக்கு

செய்முறை:

பிரண்டையை சுத்தம்செய்யும் போது கை அரிக்காமல் இருக்க கைகளில் நல்லெண்ணெய் தடவி கொள்ளவும். பின்னர், நார், தோல், எல்லாம் அகற்றி சிறிதாக வெட்டவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பிரண்டை துண்டுகளை போட்டு கலர் மாறும் வரை நன்றாக வதக்கி தனியாக எடுத்து ஆற வைக்கவும். அதே வாணலியில் எண்ணெய் இருந்தால் வடித்து விட்டு புளி வற்றல், கருவேப்பிலை, இவற்றை போட்டு மிதமான தீயில் வறுத்த பின்பு கல் உப்பு, பூண்டு சேர்த்து நன்றாக வறுத்து, வதக்கி வைத்திருக்கும் பிரண்டை யுடன் சேர்ந்து விடலாம். பின் உளுத்தம்பருப்பை போட்டு நன்கு சிவக்க வறுத்து தனியாக தட்டவும். பின் கடலைப்பருப்பை வறுத்து தட்டவும். பின் எள்ளையும் வறுத்து அத்துடன் சேர்க்கவும். பின்னர் பச்சரிசி, நல்ல மிளகு இரண்டையும் சேர்த்து லேசாக வறுத்து விடலாம். அடுப்பை அணைத்து விட்டு பெருங்காயப்பொடியை அத்துடன் சேர்த்து விடவும்.

இதையும் படியுங்கள்:
மூலிகைப் பொருட்களின் குணங்களும், உபயோகங்களும்!
பிரண்டை பொடி

அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக ஆறிய பின் சிறிது, சிறிதாக மிக்ஸியில் போட்டு நன்கு நைசாக அரைக்க வேண்டும்.. “இந்த பொடி சாப்பிட ரெடி” சத்து நிறைந்த பிரண்டை பொடியுடன் நெய் விட்டும் சாப்பிடலாம். தனியாகவும் தோசை, இட்லி, சாப்பாட்டுடன் சாப்பிடலாம்.

பசியை தூண்டும் பிரண்டை குழம்பு

தேவையான பொருட்கள்:

பிரண்டை _100கிராம்

சின்ன வெங்காயம்_100 கிராம்

பூண்டு _100 கிராம்

பச்சை மிளகாய்_5

தக்காளி _3

கறிவேப்பிலை _ 2 கொத்து

மஞ்சள் தூள் _1/2 ஸ்பூன்

புளி _ நெல்லிக்காய் அளவு

மிளகாய் தூள் _11/2 ஸ்பூன்

மல்லித்தூள் _ 2 ஸ்பூன்

வெந்தயம் _ 1 ஸ்பூன்

சோம்பு _1 ஸ்பூன்

நல்லெண்ணெய்_ 2 ஸ்பூன்

உப்பு _தேவைக்கு

 பிரண்டை குழம்பு
பிரண்டை குழம்புImage credit - youtube.com

செய்முறை:

பிரண்டையை நார், தோல் இல்லாமல் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புளியை நீர் விட்டு ஊற வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பிரண்டை துண்டுகளை போட்டு வதக்கி தனியாக எடுக்கவும். பின் அதே வாணலியில் இருக்கும் எண்ணெயில் வெந்தயம், சோம்பும் சேர்ந்து பொரிந்ததும் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு கருவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும். பின் தக்காளியை சேர்த்து உப்பு போட்டு நன்றாக வதக்கி அத்துடன் வதக்கி வைத்த பிரண்டையை போட்டு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்னர் மிளகாய் தூள், மல்லித்தூள், புளி கரைசல் இவற்றை சேர்த்து நன்கு கலந்து வைத்து வதக்கிய பிரண்டையுடன் ஊற்றி உப்பு சரிபார்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக கொதிக்க வைக்கவும். பிரண்டை குழம்பு ரெடி.

கிராமங்களில் ஆடுகள், மாடுகள் இவற்றிற்கு சில நேரங்களில் ஜீரணிக்காமல் வயிறு ஊதி சாப்பிடாமல் இருக்கும். அப்போது ஒரு நீளமான பிரண்டை கொடியை எடுத்து வயிற்றில் சுற்றி விடுவார்கள். சற்று நேரத்தில் வயிறு வற்றி சாப்பிட்டு விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com