
பயத்தம்பருப்பு பாயாசம்
செய்யத் தேவையான பொருட்கள்:
பயத்தம் பருப்பு -ஒரு கப்
வெல்லத் துருவல்- ஒரு கப்
சேமியா- கைப்பிடி அளவு
தேங்காய்த் துருவல் -கைபிடி அளவு
முந்திரி, திராட்சை -நெய்யில் வறுத்தது -ஒரு டேபிள் ஸ்பூன்
ஏலப்பொடி -கால் கால் டீஸ்பூன்
செய்முறை:
பயத்தம் பருப்பை நன்றாக வேகவைக்கவும் .பயத்தம் பருப்பு நன்றாக வெந்த உடன் சேமியாவையும் அதனுடன் சேர்த்து குழைய வேக வைத்து, அதனுடன் வெல்லக் கரைசலை சேர்த்து கொதிக்க விட்டு ,வறுத்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சை ஏலப்பொடி சேர்த்து அலங்கரித்து கைப்பிடி தேங்காய் துருவலையும் கலந்து பரிமாறவும் . பருப்பில் இருக்கும் புரோட்டின் மற்றும் வெல்லத்தில் இருக்கும் இரும்பு சத்தும் சேர்ந்து சுவைப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இந்த சத்துக்கள் நன்மை பயக்கும் என்பதை சொல்லவேண்டுமா என்ன?
ஃப்ரூட் சாலட்
செய்ய தேவையான பொருட்கள்:
ஆப்பிள் ,வாழைப்பழம், பைனாப்பிள், மாம்பழம், திராட்சை, லிச்சி எல்லாமாகச் சேர்த்த துண்டுகள்- ஒரு பெரிய கப்
வால்நட், அக்ரூட், பிஸ்தா மூன்றும் சேர்த்து- அரைகப்
ஃப்ரெஷ் கிரீம், தயிர் தலா- ரெண்டு டேபிள் ஸ்பூன்
வறுத்து பொடித்த கடுகு, மிளகு, சீரக பொடி- அரை டீஸ்பூன்
வினிகர் -சிறிதளவு
வேகவைத்த வெள்ளை சுண்டல்- கைபிடி அளவு
வெள்ளரி துருவல் -கைப்பிடி அளவு
செய்முறை:
ஃப்ரெஷ் கிரீமுடன் மிளகு, கடுகு, சீரக பொடிகளை கலந்து வினிகர் சேர்த்து கலந்து அதனுடன் தயிர் சேர்த்து கலக்கவும்.
இப்போது மேலே கூறிய பழத்துண்டுகள், சுண்டல் மற்றும் வெள்ளரித்துருவலுடன் அடித்து வைத்திருக்கும் கிரீமை கலந்து சிறிது நேரம் ஊறவிடவும். பின்னர் நட்ஸ் வகைகளை அலங்கரித்து சிறிது நேரம் குளிரவைத்து சாப்பிட எல்லாமாகச் சேர்ந்து ஒரு இனிய சுவை கிடைக்கும். அது நாக்கிற்கு மிகவும் இன்பம் பயப்பதாக இருக்கும். சத்துக்களும் தாராளம். நல்ல எனர்ஜி நிறைந்த ஃப்ரூட் சாலட் இது.