சட்டுன்னு ஒரு ஸ்நாக்ஸ் வேணுமா? 5 நிமிட உடனடி ரெசிபி இங்கே!

Instant recipe here!
A quick snacks
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

சில சமயம் திடீரென ஏதாவது ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு வந்துவிடும். பார்பி, மைசூர்பா இதெல்லாம் செய்வதற்கு சிறிது நேரம் எடுக்கும். அதுவே இந்த மாலாடு செய்வதென்றால் நிமிடத்தில் செய்து சாப்பிட்டும் விடலாம். திடீர் விருந்தாளிகளையும் சமாளிக்க உதவும். செய்வது ரொம்ப ரொம்ப சுலபம்.

மாலாடு:

பொட்டுக்கடலை ஒரு கப் 

சக்கரை 3/4 கப் 

ஏலக்காய் 2 

முந்திரிப்பருப்பு 10 

நெய் சிறிது

பொட்டுக்கடலையை வாணலியில் சிறிது சூடு செய்து நைசாக பொடிக்கவும். சர்க்கரையை தனியாக ஏலக்காயுடன் சேர்த்து பொடிக்கவும். இரண்டையும் ஒன்றாக கலந்து கொண்டு வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரிப் பருப்பை உடைத்துப் போட்டு வறுத்து கொட்டி உருண்டைகளாக அழுத்தி பிடிக்கவும். ருசியான மாலாடு நிமிடத்தில் தயார்.

ஸ்வீட்டுடன் காரமும் சேர்த்து சாப்பிட்டால்தானே ருசிக்கும்.

ஓல பக்கோடா:

கடலை மாவு ஒரு கப் 

அரிசி மாவு ஒரு கப்

உப்பு சிறிது 

காரப்பொடி ஒரு ஸ்பூன் 

நெய் அல்லது வெண்ணெய் 2 ஸ்பூன்

பெருங்காயத்தூள் சிறிது

இதையும் படியுங்கள்:
பாயாசம் முதல் பூரி வரை... வாழைப்பழத்தின் விதவிதமான அவதாரங்கள்!
Instant recipe here!

எல்லாவற்றையும் சிறிது நீர் விட்டு கலந்து பிசைந்து எண்ணெய் காய்ந்ததும் அச்சில் போட்டு பிழிய ஐந்தே நிமிடத்தில் ரெடி.

logo
Kalki Online
kalkionline.com