மாம்பழ பிரியர்களுக்கான ஒரு சூப்பர் ட்ரீட்! - வீட்டில் செய்யக்கூடிய 4 வகை மாம்பழ ரெசிபிகள்!

Tasty Mango recipes
Mango recipes!
Published on

மேங்கோ சியா புட்டிங்

தேவையானவை:

சியா சீட்ஸ்-3 டேபிள் ஸ்பூன், தேங்காய் பால்-2கப்,தேன்-2டேபிள் ஸ்பூன், மாம்பழ கூழ்-2கப், அலங்கரிக்க -செர்ரி.

சியாவை தேங்காய் பால் மற்றும் தேன் சேர்த்து ஊறவிடவும். ஊறியதும் பௌலில் மாற்றி மாம்பழக் கூழ் கலந்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். செட் ஆனதும் எடுத்து செர்ரி அலங்கரித்து பரிமாறவும்.

மாம்பழ குல்ஃபி 

தேவையானவை: 

மாம்பழக் கூழ்-1கப்,கார்ன்ஃப்ளோர்-1டேபிள் ஸ்பூன்,காய்ச்சிய பால்-1லி, மில்க்மெய்ட்-1/2கப்.

செய்முறை: 

பாலை திக்காக  காய்ச்சி அதனுடன் மில்க்மெய்ட் சேர்க்கவும். சோள மாவு சேர்த்துக் கலவை கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். ஆறியதும் மாம்பழக் கூழ் சேர்த்து நன்கு ஆற விடவும். இதை குல்ஃபி மோல்டில்  ஊற்றி 3-4மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து செட்டானதும் எடுத்து குல்ஃபி யை பரிமாறவும்.

மாம்பழ ஷாஹி துக்டா

தேவையானவை: 

மாம்பழக்கூழ்-1கப், ப்ரெட்-தூளாக்கியது-4, திக்கான பால்,-1கப், மில்க்மெய்ட்-1கப் நெய்-2டேபிள் ஸ்பூன், பிரெட் -10, துண்டு அலங்கரிக்க சீவிய மாம்பழத்துண்டுகள், பாதாம், பிஸ்தா துருவல்-2டேபிள் ஸ்பூன்.

ரொட்டி துண்டுகளை நெய்யில் மொறுமொறுப்பாக பொரிக்கவும். ரஃப்டிக்கு பாலை சூடாக்கி திக்கானதும், மில்க் மெய்ட் சேர்க்கவும். ரொட்டித் துண்டுகளை சேர்க்கவும். மாம்பழக் கூழ் சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து செட்டானதும் எடுத்து வைக்கவும்.

பரிமாறும்போது மாம்பழ ரஃப்டியை எடுத்து வறுத்த தொட்டில் துண்டின் மேல் பரப்பி அதன் மேல் மாம்பழத் துண்டுகளை சேர்த்து நறுக்கிய பிஸ்தா பாதாமை தூவி பரிமாறவும்.

இதையும் படியுங்கள்:
வீட்டுக் குறிப்புகள்: சமையலறையை சுத்தம் செய்வதற்கான எளிய வழிகள்!
Tasty Mango recipes

மேங்கோ கஸ்டர்டு மில்க் ஷேக்

தேவையானவை; 

மாம்பழம்_1, சர்க்கரை _1/2கப், கஸ்டர்டு பவுடர் -1டேபிள் ஸ்பூன்,பால்-4டம்ளர், அலங்கரிக்க _மாம்பழத் துண்டுகள்,செர்ரி.

மிக்ஸி ஜாரில் தோலுரித்த மாம்பழத்தை சேர்த்து அதனுடன் சர்க்கரை பின், பால் கஸ்டர்டு பவுடர் சேர்க்கவும். இவற்றை விப்பர் மோரில் அடித்து பௌலில் ஊற்றவும். இதை ஃப்ரிட்ஜில் வைக்கவும். கூல் ஆனதும் சர்விங் கிளாஸில் ஊற்றி செர்ரி அலங்கரித்து பரிமாறவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com