வெரைட்டியான முந்திரி புலாவ் மற்றும் 3 பிரியாணி வகைகள்!

Variety of cashew pulao recipes
healthy recipes
Published on

முந்திரி புலாவ்

தேவை;

பாசுமதி அரிசி _1 கப்

பொடித்த முந்திரி _1 ஸ்பூன்

துண்டுகளாக்கிய முந்திரி _1/4 கப்

மிளகுத்தூள், சீரகத்தூள் தலா _1 ஸ்பூன்

பெருங்காயத்தூள் _1/4 ஸ்பூன்

ஏலக்காய், கிராம்பு தலா _2

நெய், உப்பு _ தேவைக்கு

செய்முறை:  அரிசியை   கழுவி 10 நிமிடம் ஊறவிடவும். குக்கரில் நெய்விட்டு துண்டுகளாக்கிய முந்திரியை சேர்த்து பொன்னிறத்தில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதே நெய்யில் ஏலக்காய், கிராம்பு தாளித்து ஊறிய அரிசியை போட்டு வறுக்கவும். மிளகுத்தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள், பொடித்த முந்திரி, உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் விட்டு குக்கரை மூடவும். மிதமான தீயில் வேக வைத்து ஒரு விசில் வந்ததும் சில நிமிடங்கள் கழித்து இறக்கவும். ஆவி போனதும் மூடியை திறந்து வறுத்த முந்திரியைப் போட்டு மெதுவாக கிளறி பரிமாறவும்.

நெல்லிக்காய் பிரியாணி தேவை

பாசுமதி அரிசி _ 1 கப்

துருவிய நெல்லிக்காய் _1/2 கப்

துருவிய இஞ்சி, கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச்சாறு தலா _ 1 ஸ்பூன்

கீறிய பச்சைமிளகாய் _2

எண்ணெய், உப்பு _ தேவைக்கு

செய்முறை: அரிசியை 10 நிமிடம் ஊறவைத்து நெய்யில் வறுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு, பச்சை மிளகாய் துருவிய இஞ்சி, நெல்லிக்காய் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் கரம் மசாலாத்தூள், உப்பு, அரிசி சேர்த்து கிளறி தண்ணீர் விட்டு குக்கரை மூடவும். மிதமான தீயில் வேக வைத்து ஒரு விசில் வந்ததும் சில நிமிடங்கள் கழித்து இறக்கி எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். சுவையான நெல்லிக்காய் பிரியாணி ரெடி.

பலாமூசு பிரியாணி

தேவை;

பாசுமதி அரிசி _1 கப்

சிறிய பலாக்காய் துண்டுகள் 1/2 கப்

நறுக்கிய தக்காளி, வெங்காயம் தலா 1/4 கப்

புதினா, கொத்தமல்லி, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்த விழுது _2 ஸ்பூன்

மஞ்சள்தூள் _1/4 ஸ்பூன்

பட்டை _1 துண்டு

ஏலக்காய், கிராம்பு தலா _1

நெய், எண்ணெய், உப்பு _ தேவைக்கு

செய்முறை: பலாமூசு என்னும் சிறிய பலாக்காயை தோல் சீவிப் பெரிய துண்டுகளாக  நறுக்கி வேக வைக்கவும். தண்ணீரை வடித்து ஆறியதும் மிக்ஸியில் ஒரு முறை சுற்றி எடுத்தால் பலாத்துருவலாக கிடைக்கும். அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து தண்ணீரை வடித்து நெய்யில் வறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி தக்காளியைப் போடவும். லேசாக வதங்கியதும் மஞ்சள் தூள் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும் பலாத்துருவல், உப்பு சேர்த்து கலந்து அரிசியை போட்டு தண்ணீர் விட்டு குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும் சில நிமிடங்கள் விட்டு இறக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

இதையும் படியுங்கள்:
சுவையில் அசத்தும் சத்தான ஆளி விதை லட்டு, கேரட் கோகனட் லட்டு!
Variety of cashew pulao recipes

வேர்க்கடலை பிரியாணி

தேவை;

வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை _1/2 கப்

பாசுமதி அரிசி _1 கப்

காய்ந்த மிளகாய்_4

நீளமாக நறுக்கிய வெங்காயம் 1/4 கப்

இஞ்சி பூண்டு விழுது _1 ஸ்பூன்

புதினா _ சிறிதளவு

மஞ்சள்தூள் _1/4 ஸ்பூன்

நெய், எண்ணெய், உப்பு _ தேவைக்கு

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை வறுத்து வேர்க்கடலையுடன் சேர்த்து ஒன்றிரண்டாக பொடிக்கவும். அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைத்து தண்ணீரை வடித்து நெய்யில் வறுக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பச்சை வாசனை போனதும் வெங்காயம் சேர்த்து வதக்கி புதினா, மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். அரிசி, பொடித்த வேர்க்கடலை,  உப்பு சேர்த்து ஒரு முறை கிளறி மிதமான தீயில் வேகவைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com