வெரைட்டியான காளான் ரெசிபிகள்! – தந்தூரி டிக்கா மற்றும் சுவையான தொக்கு!

mushroom recipes!
A variety of mushroom recipes!
Published on

ஸ்ரூம் டிக்கா என்பது தயிர் மற்றும் மசாலா பொருட்களில் ஊற வைத்த காளான்களை வறுத்து அல்லது சுட்டு தயாரிக்கப்படும் ஒரு சுவையான இந்திய சைவ உணவாகும். இதை கிரில், ஏர் பிரையர் அல்லது தவா போன்ற பல்வேறு முறைகளில் தயாரிக்கலாம். செய்வது மிகவும் எளிது.

பட்டன் காளான் தொக்கு:

பட்டன் காளான் 1 பாக்கெட் வெங்காயம் 1

தக்காளி 1

இஞ்சி 1 துண்டு

பூண்டு 6 பற்கள்

சாம்பார் பொடி 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

சீரகத்தூள் 1/2 ஸ்பூன்

தனியாத்தூள் 1 ஸ்பூன்

உப்பு தேவையானது

தாளிக்க: கடுகு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, எண்ணெய்

மஷ்ரூமை நன்கு கழுவி சுத்தம் செய்து நறுக்கி சூடான தண்ணீரில் போட்டு 5 நிமிடங்கள் வைக்கவும். பிறகு பிழிந்து எடுத்து தனியாக வைக்கவும். பூண்டு, இஞ்சி, மிளகாய், தக்காளி, வெங்காயம் போன்றவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, வற்றல் மிளகாயை கிள்ளி சேர்த்து கடுகு பொரிந்ததும் நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து நறுக்கிய வெங்காயம், தக்காளியையும் போட்டு மஞ்சள் தூள், சாம்பார் தூள், தனியா பொடி, சீரகப்பொடி, தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். அதில் நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து ஐந்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வதக்கி எடுக்க மிகவும் ருசியான பட்டன் காளான் தொக்கு தயார்.

இதனை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். பிரட், சப்பாத்தி பூரிக்கும் ஏற்றது. செய்வதும் சுலபம்; ருசியும் அதிகம்.

இதையும் படியுங்கள்:
சாக்லேட் பான் கேக் முதல் ஓட்ஸ் கேக் வரை: மூன்று சுவையான கேக் ரெசிபிகள்!
mushroom recipes!

தந்தூரி காளான் (மஷ்ரூம்) டிக்கா:

மஷ்ரூம் 200 கிராம்

குடைமிளகாய் 1

வெங்காயம் 1

வெண்ணெய் 2 ஸ்பூன்

தேவையானது:

கெட்டி தயிர் 2 ஸ்பூன்

காஷ்மீரி மிளகாய் தூள் 1 ஸ்பூன் மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்

கடலை மாவு 1 ஸ்பூன்

உப்பு தேவையானது

இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்

மசாலாவிற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளவும். காளானை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். குடைமிளகாய், வெங்காயத்தை சதுரத்துண்டுகளாக நறுக்கவும்.

தயார் செய்து வைத்துள்ள மசாலாக் கலவையில் நறுக்கிய காய்களை சேர்த்து நன்கு பிரட்டி ஒருமணி நேரம் ஊறவிடவும். பிறகு ஒன்றன்பின் ஒன்றாக மாற்றி கிரில் குச்சியில் அல்லது மரக்குச்சியில் சொருகி வைக்கவும். மொத்தத்தையும் தயார் செய்து வைத்துக் கொண்டு, குச்சிகளை கிரில் பேன் அல்லது சாதாரண தோசை கல்லில் வைத்து கொஞ்சமாக வெண்ணை தடவி நாலா பக்கமும் திருப்பிவிட்டு சுட்டு எடுக்க மிகவும் ருசியான மஷ்ரூம் டிக்கா தயார்.

இதையும் படியுங்கள்:
நோய் எதிர்ப்பு சக்தியின் ஆதாரம்: கீரைகளின் மருத்துவப் பொக்கிஷங்கள்!
mushroom recipes!

மஷ்ரூம் டிக்காவை புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி அல்லது ஏதேனும் சாலடுடன் சேர்த்து சாப்பிட சிறந்த பசியை தூண்டும் உணவாக (appitizer) இருக்கும். இதனை சாதத்திற்கு பக்க உணவாகவும்(side dish) எடுத்துக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com