வித விதமான நாவல் பழ ரெசிபிக்கள்!

நாவல் பழ ரெசிபி...
நாவல் பழ ரெசிபி...

நாவல் பழம் மே ஜூன் மாதங்களில் நிறைய கிடைக்கும். சிறிது இனிப்பு புளிப்பு துவர்ப்பு என சூப்பரான சுவை கொண்டது இந்த நாவல் பழங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான பழம் இது. இதனைக் கொண்டு விதவிதமான உணவுகளை தயாரிக்கலாம்.

நாவல் பழம்:

நாவல் பழம் 15 

ரசப்பொடி ஒரு ஸ்பூன் 

தக்காளி 1 

மிளகு சீரகப்பொடி ஒரு ஸ்பூன் 

பூண்டு 4 பல் 

வெல்லம் ஒரு துண்டு 

வெந்த துவரம் பருப்பு 1/2 கரண்டி 

உப்பு தேவையானது

கொத்தமல்லி சிறிது

தாளிக்க: கடுகு, மிளகாய், கறிவேப்பிலை சிறிது

நெய் ஒரு ஸ்பூன்

நாவல் பழத்தை கொட்டைகள் நீக்கி சதைப்பகுதியை எடுத்துக் கொள்ளவும். அத்துடன் தக்காளி ஒன்றை சேர்த்து சிறிது நீர் விட்டு மிக்ஸியில் அரைத்து தட்டிய பூண்டு, ரசப்பொடி, தேவையான உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து இரண்டு கொதி கொதித்ததும் வெந்த துவரம் பருப்பை 2 கப் நீர் விட்டு நன்கு கரைத்து விடவும். ரசம் நுரைத்து வரும்போது ஒரு துண்டு வெல்லம் சேர்த்து அடுப்பை அணைத்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையை தூவவும். வாணலியில் நெய்விட்டு கடுகு, கருவேப்பிலை, மிளகாய் ஒன்றை கிள்ளிப் போட்டு, மிளகு சீரகம் பொடி சேர்த்து கடுகு பொரிந்ததும் ரசத்தில் கொட்டவும். மிகவும் ருசியான நாவல் பழ ரசம் தயார். இதனை சூடான சாதத்துடன் பரிமாற மிகவும் ருசியாக இருக்கும்.

நாவல் பழ ஜெல்லி:

நாவல் பழச்சாறு ஒரு கப் 

ஜெலட்டின் 20 கிராம் 

சர்க்கரை ஒரு கப் 

ஒன்றிரண்டாக பொடித்த நட்ஸ்கள் 4 ஸ்பூன் 

நாவல் பழத் துண்டுகள் சிறிது வெண்ணெய் சிறிது

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நாவல் பழ ஜெல்லியை தயாரிக்க முதலில் ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் விட்டு ஜெலட்டினை 10 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு அதனை அடுப்பில் வைத்து மிதமான தீயில் நன்கு கரையை விட்டு இறக்கவும். மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கரைந்ததும் இறக்கி ஆறவிடவும். இதனுடன் ஜெலட்டின் கரைசல், நாவல் பழச்சாறு இரண்டையும் சேர்த்து கலக்கவும். நமக்கு விருப்பமான அச்சில் சிறிதளவு வெண்ணை தடவி ஜெலட்டின், நாவல் பழச்சாறு கரைசலை ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஆறு மணிநேரம் கழித்து நன்கு செட்டாகி இருக்கும். இதனை எடுத்து அப்படியே சாப்பிடலாம் அல்லது துண்டுகளாக்கி வறுத்த நட்ஸ்கள், ஜெல்லித் துண்டுகள், நாவல் பழத்துண்டுகள் சேர்த்து பரிமாறலாம். மிகவும் ருசியான நாவல்பழ ஜெல்லி தயார்.

இதையும் படியுங்கள்:
சருமம் பளபளப்பாக ஜொலிக்க சில மேஜிக் வீட்டு வைத்தியங்கள்!
நாவல் பழ ரெசிபி...

ருசியான நாவல் பழ பானம்:

நாவல் பழங்கள் 20

பிளாக் சால்ட் சிறிது 

எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

சர்க்கரை 1 ஸ்பூன்

புதினா இலைகள் 6

முதலில் நாவல் பழங்களை நன்கு கழுவி அதனுள் இருக்கும் கொட்டையை கையால் நன்கு கசக்கி எடுத்து விடவும். பிறகு கருப்பு உப்பு, சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மசிக்கவும் அல்லது மிக்ஸியில் ஒரு 30 செகண்ட் ஓடவிட்டு வடிகட்டவும். புதினா இலைகளை கையால் கசக்கி சேர்த்து பருக மிகவும் ருசியான நாவல் பழ பானம் தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com