அக்ஷய திரிதியைக்கு லக்ஷ்மி தேவிக்கு மிகவும் பிடித்தமான நெய் வைத்தியம் கல்கண்டு பொங்கலும், பாயாசமும் செய்து படைப்பது சிறப்பாகும். வீட்டில் லக்ஷ்மி தேவிக்கு பிடித்ததை வைத்து இந்த நல்ல நாளில் பூஜிக்கும் போது தானாகவே செல்வ செழிப்பு வீடு வந்து சேரும் என்பதில் மாற்று கருத்தில்லை.
மா, பலா பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:
பலா-1 கப்.
மாம்பழம்-1கப்.
பால்-1/2 கப்.
சேமியா-1 கப்
மில்க் மெய்ட்-1 தேக்கரண்டி.
தேங்காய் பால்-1 கப்.
நெய்- தேவையான அளவு.
ஏலக்காய் தூள்-1/4 தேக்கரண்டி.
குங்குமப்பூ- சிறிதளவு.
முந்திரி-10
உலர்ந்த திராட்சை-10
செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து பலா 1 கப், மாம்பழம் 1 கப் சேர்த்து கொஞ்சமாக வதக்கி ½ கப் காய்ச்சிய பால் சேர்த்து கொதித்தவுடன் வேக வைத்த சேமியா 1 கப்பை இத்துடன் சேர்த்து நன்றாக கலக்கவும். மில்க் மெய்ட் 1 தேக்கரண்டி, தேங்காய் பால் 1 கப், குங்குமப்பூ சிறிது நிறத்திற்காக சேர்க்கவும். ஏலக்காய் தூள் ¼ தேக்கரண்டி சேர்த்து நன்றாக கின்டி கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும். அவவ்ளவுதான் சுவையான மா, பலா பாயாசம் தயார்.
இந்த சீசனில் கிடைக்கக்கூடிய பழம் என்பதால் சுலபமாக வீட்டிலேயே செய்யலாம். நீங்களும் வீட்டிலேயே செஞ்சு பார்த்துட்டு எப்படியிருந்ததுன்னு சொல்லுங்க.
அக்ஷய திரிதியை ஸ்பெஷல் கல்கண்டு பொங்கல் செய்யலாம் வாங்க!
தேவையான பொருட்கள்:
அரிசி-1 கப்
சிறுபருப்பு-1 கப்
பால்-1 ½ லிட்டர்.
முந்திரி-10
திராட்சை-10
நெய்-100ml.
கல்கண்டு-1கப்.
சக்கரை-50 கிராம்.
ஏலக்காய்-1/2 தேக்கரண்டி.
பச்சை கற்பூரம்-1 சிட்டிகை.
உப்பு-1 சிட்டிகை.
செய்முறை விளக்கம்:
முதலில் குக்கரில் ஊறவைத்த அரிசி 1 கப், ஊர வைத்த சிறுபருப்பு 1/2 கப் சேர்த்து அத்துடன் 1 ½ கப் பால் சேர்க்க வேண்டும். இத்தோடு 1 ½ கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். கடைசியாக 1 தேக்கரண்டி நெய் சேர்த்து நன்றாக கலக்கி விடவும். இப்போது குக்கரை 4 விசில் வரும் வரை வைக்கவும்.
இப்போது 1 கப் கல்கண்டை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். குக்கரில் 4 விசில் வந்த பிறகு அரிசியும், பருப்பும் நன்றாக வெந்திருக்கும். இப்போது அத்துடன் ஏலக்காய் ½ தேக்கரண்டி, 1 சிட்டிகை பச்சை கற்பூரம், மிக்ஸியில் அரைத்து வைத்திருந்த கல்கண்டு பவுடர், இத்துடன் 50 கிராம் சக்கரையும் சேர்க்கவும்.
இப்போது அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 100 ml நெய் சேர்த்து அதில் 10 முந்திரி, 10 திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து அதை எடுத்து பொங்கலில் சேர்க்கவும். கடைசியாக 1 சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கின்டி இறக்கவும். கோவில்களில் செய்து தரப்படும் பிரசாதம் மாதிரி டேஸ்ட்டியா இருக்கும். அதுக்கு நான் கியேரண்டி. கண்டிப்பா நீங்களும் வீட்டிலே டிரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.