ஆல் இன் ஒன் சட்டினி. இரண்டே நிமிடத்தில் செய்து விடலாம்!

ஆல் இன் ஒன் சட்டினி. இரண்டே நிமிடத்தில் செய்து விடலாம்!
Updated on

ட்லி, தோசை,பொங்கல், பிடி கொழுக்கட்டை என எதற்கும் பொருத்தமாக இருக்கும் இந்த சட்டினியை இரண்டே நிமிடத்தில் செய்து விடலாம்.

பெரிய வெங்காயம் 1

பொட்டுக்கடலை 1/4 கப் 

வேர்க்கடலை 1/4 கப் 

பச்சை மிளகாய் 6

பூண்டு பற்கள் 4 

உப்பு தேவையான அளவு 

புளி பெரிய நெல்லிக்காய் அளவு கொத்தமல்லி ஒரு கைப்பிடி. 

தாளிக்க: கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் 1, உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்.

       வறுக்க வேண்டாம், வதக்க வேண்டாம், ஈசியாக இரண்டே நிமிடத்தில் செய்து விடக் கூடிய சட்னி இது. முதலில் மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை, தோல் நீக்கிய வேர்கடலை, பச்சை மிளகாய், பூண்டு பற்கள், உப்பு, புளி ஆகியவற்றை சேர்த்து இரண்டு சுற்று சுற்றி பிறகு நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி ஒரு கைப்பிடி சேர்த்து சிறிது நீர் விட்டு அரைக்கவும். சட்னி ரெடி. இதற்கு தாளிக்க நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் 1  கிள்ளி போட்டு தாளித்து சட்னியில் கொட்டி தேவையான அளவு நீர் கலந்து பரிமாறவும்.

 அசத்தலான சுவையில் சட்னி தயார்.

logo
Kalki Online
kalkionline.com