ஆல் டைம் ஃபேவரைட் மிளகாய் பஜ்ஜி, ஓட்ஸ் பக்கோடா செய்து பாருங்க!

மிளகாய் பஜ்ஜி, ஓட்ஸ் பக்கோடா...
மிளகாய் பஜ்ஜி, ஓட்ஸ் பக்கோடா...

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆல் டைம் ஃபேவரைட் ஸ்நாக்ஸ் மிளகாய் பஜ்ஜிதான். சிம்பிள் அண்ட் டேஸ்டி ஸ்நாக்ஸ் மிளகாய் பஜ்ஜியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மிளகாய் பஜ்ஜி:

பஜ்ஜி மிளகாய்  10

கடலை மாவு 1 கப்

அரிசி மாவு 1/2 கப்

உப்பு தேவையானது

காரப்பொடி 1/2 ஸ்பூன்

கரம் மசாலா 1/2 ஸ்பூன்

பெருங்காயத்தூள் சிறிது

எண்ணெய் பொரிக்க

கேசரி கலர் விருப்பப்பட்டால்

சோடா உப்பு 1/4 ஸ்பூன்

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, காரப்பொடி, கரம் மசாலா, பெருங்காயத்தூள், விருப்பப்பட்டால் கேசரி கலர், சோடா உப்பு எல்லாவற்றையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு மாவை கரைத்துக் கொள்ளவும்.

பஜ்ஜி மிளகாயை கத்திக்கொண்டு இரண்டாக கீரி முழுவதுமாக வெட்டாமல் உள்ளிருக்கும் விதைகளை எடுத்துவிட்டு காம்புடன் பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். இருபுறமும் நன்கு சிவந்து வந்ததும் எடுத்து தக்காளி சாஸ் அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாற மழைக்கு இதமாக இருக்கும். இதனை டீயுடன் மாலை நேரம் சாப்பிட அருமையாக இருக்கும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இந்த மிளகாய் பஜ்ஜி செய்வது ரொம்ப சுலபம்.

இன்ஸ்டன்ட் ஓட்ஸ் பக்கோடா:

இன்ஸ்டன்ட் ஓட்ஸ் 1 கப்

பெரிய வெங்காயம் ஒன்று 

இஞ்சி ஒரு துண்டு 

பச்சை மிளகாய் இரண்டு 

மஞ்சள் தூள் அரை ஸ்பூன் 

மிளகாய் தூள் அரை ஸ்பூன்

உப்பு தேவையானது 

கருவேப்பிலை சிறிது 

கொத்தமல்லி சிறிது 

எண்ணெய் பொரிக்க 

இதையும் படியுங்கள்:
அறுசுவை தெரியும், அதென்ன ‘உமாமி’ சுவை?
மிளகாய் பஜ்ஜி, ஓட்ஸ் பக்கோடா...

ஒரு பாத்திரத்தில் நீள நீளமாக நறுக்கிய வெங்காயம் 1, தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு தூள், மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கையால் நன்கு பிசிறி கொள்ளவும். ஐந்து நிமிடம் அப்படியே வைத்து விட நீர் விட்டுக் கொள்ளும். இப்பொழுது ஓட்ஸ் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசையவும்.

வாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் அதில் பிசைந்து வைத்துள்ளதை சிறுசிறு பக்கோடாக்களாக எண்ணெயில் கிள்ளி போடவும். இருபுறமும் நன்கு சிவந்து வந்ததும் எடுத்து பரிமாற மிகவும் ருசியான இன்ஸ்டன்ட் ஓட்ஸ் பக்கோடா தயார். ஐந்தே நிமிடத்தில் செய்துவிடலாம் இந்த ஈவினிங் ஸ்நாக்ஸ்யை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com