ஹைவே தாபா ரகசியம் லீக் ஆனது! நாவில் எச்சில் ஊறவைக்கும் 'ஆலு பூனா' இப்போது உங்கள் கிச்சனில்!

Aloo Bhuna
Aloo Bhuna
Published on

நாம் நீண்ட தூரப் பயணங்கள் செல்லும்போது, ஹைவே ஓரங்களில் இருக்கும் தாபாக்களில் சாப்பிடும் உணவுக்கு என்று ஒரு தனி ருசி உண்டு. அதிலும் குறிப்பாக, சூடான தந்தூரி ரொட்டிக்கு அவர்கள் கொடுக்கும் அந்த ‘ஆலு பூனா (Aloo Bhuna)’ இருக்கிறதே, அதன் சுவை பல நாட்கள் நாக்கில் நிற்கும். சாதாரணமாக நாம் வீட்டில் செய்யும் உருளைக்கிழங்கு குருமா போல இல்லாமல், இது சற்று கெட்டியாகவும், மசாலாக்கள் நன்கு வறுபட்டு உருளைக்கிழங்கோடு ஒட்டிக்கொண்டும் இருக்கும். 

Bhuna என்றாலே மசாலாவை நன்கு சுருள வதக்குவது என்று அர்த்தம். அதே நிறம், அதே ருசி மற்றும் அதே மணத்துடன் உங்கள் வீட்டிலும் இதைச் சுலபமாகச் செய்யலாம். வாருங்கள், அந்தத் தாபா ரகசியத்தைக் கற்றுக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

  • சிறிய உருளைக்கிழங்கு (Baby Potatoes) - ½ கிலோ 

  • பெரிய வெங்காயம் - 2 

  • தக்காளி - 2 

  • கெட்டித் தயிர் - ½ கப்

  • இஞ்சி பூண்டு விழுது - 1½ டீஸ்பூன்

  • பச்சை மிளகாய் - 2

  • காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1½ டீஸ்பூன்

  • மல்லித்தூள் - 1 டீஸ்பூன்

  • சீரகத்தூள் - ½ டீஸ்பூன்

  • மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்

  • கரம் மசாலா - ½ டீஸ்பூன்

  • கஸ்தூரி மேத்தி - 1 டீஸ்பூன்

  • சீரகம், பட்டை, பிரிஞ்சி இலை - தாளிக்க

  • எண்ணெய்/நெய் - தேவையான அளவு

  • உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கைத் தயார் செய்வது மிக முக்கியம். சிறிய உருளைக்கிழங்காக இருந்தால் முழுவதுமாகவும், பெரியதாக இருந்தால் துண்டுகளாகவும் நறுக்கிக் கொள்ளவும். 

உருளைக்கிழங்கைத் தோல் நீக்கி, ஒரு ஃபோர்க் ஸ்பூனால் ஆங்காங்கே குத்தி விடவும். அப்போதுதான் மசாலா உள்ளே இறங்கும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, இந்த உருளைக்கிழங்கைப் போட்டு, லேசாக உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வெளிப்புறம் பொன்னிறமாக மாறும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். இந்த ஸ்டெப்தான் கிழங்கிற்கு ஒரு நல்ல அமைப்பைக் கொடுக்கும்.

அடுத்ததாக, கிரேவிக்கான மசாலாவைத் தயார் செய்யலாம். அதே கடாயில் இன்னும் சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடானதும் சீரம், பட்டை, பிரிஞ்சி இலை சேர்த்துத் தாளிக்கவும். 

பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும். தாபா ஸ்டைல் சுவைக்க வெங்காயம் பொன்னிறமாக வதங்க வேண்டியது அவசியம். பிறகு இஞ்சி பூண்டு விழுது மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

இதையும் படியுங்கள்:
பச்சை வெங்காயம்: ஏழைகளின் ஆன்டிபயாடிக்! குளிர்கால சளி, காய்ச்சலுக்கு ஒரே தீர்வு!
Aloo Bhuna

வெங்காயம் வதங்கியதும், காஷ்மீரி மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு, அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை ஊற்றி, எண்ணெய் தனியாகப் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கவும். மசாலா எவ்வளவு தூரம் வதங்குகிறதோ, அவ்வளவு ருசி கூடும்.

இப்போது அடுப்பை முழுவதுமாக சிம்மில் வைத்துவிட்டு, கெட்டித் தயிரை நன்கு அடித்து மசாலாவில் ஊற்றவும். தயிர் ஊற்றியவுடன் கைவிடாமல் கிளறவேண்டும், இல்லையெனில் தயிர் திரிந்துவிடும். 

தயிர் மசாலாவோடு சேர்ந்து கொதித்து மீண்டும் எண்ணெய் பிரிந்து வரும்போது, வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கைச் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் மிகக் குறைந்த அளவு தண்ணீர் தெளித்து, மூடி போட்டு 5லிருந்து 7 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடவும்.

இதையும் படியுங்கள்:
ஜாக்கிரதை! போனில் இந்த 4 விஷயங்கள் இருந்தால் போலீஸ் உங்கள் வீடு தேடி வரும்!
Aloo Bhuna

கடைசியாக மூடியைத் திறந்து பார்த்தால், வீடு முழுவதும் மசாலா மணம் வீசும். இப்போது கரம் மசாலா மற்றும் கஸ்தூரி மேத்தியை கையில் கசக்கித் தூவவும். மேலே நறுக்கிய கொத்தமல்லித் தழைகளைத் தூவி இறக்கினால், நாவில் எச்சில் ஊறவைக்கும் தாபா ஸ்டைல் ஆலு பூனா தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com