கமகமக்கும் முருங்கைப்பூ பிரியாணி!

முருங்கைப்பூ பிரியாணி
முருங்கைப்பூ பிரியாணி
Published on

பொதுவாகவே முருங்கையின் அனைத்திலும் மருத்துவகுணம் உண்டு. நரம்புகளை பலப்படுத்தும் சக்தியுடன் ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தியும் முருங்கைப் பூவிற்கு உண்டு. முருங்கைப் பூவில் சாதம், பொரியல், சூப் என செய்வார்கள். வித்யாசமாக இப்படி பிரியாணி செய்து அசத்ததுவோமே.

முருங்கைப்பூ  பிரியாணி
தேவை:
பாசுமதி அரிசி 2 டம்ளர்
முருங்கைப் பூ- 1டம்ளர்
பச்சை மிளகாய் -3
வெங்காயம் -2
குடைமிளகாய் -2
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
புதினா - கைப்பிடி அளவு
நெய் - இரண்டு தேக்கரண்டி கொத்தமல்லி தழை -சிறிது
எண்ணெய்  - தேவைக்கு
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
முதலில் பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து சுத்தமாக கழுவி  உதிரியாக வடித்துக் கொள்ளவும். அரிசியை ஆற விட்டு அதில் சிறிது நெய் விட்டு உதிர்த்துக் கொள்ளவும்.  முருங்கை பூவை சுத்தம் செய்து இட்லி தட்டில் தனியே வைத்து அரைவேக்காட்டில் மலர வேகவைத்து எடுக்கவும். பிறகு அடி கனமான வாணலியில் தேவையான எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம்  மிளகாய் சேர்த்து நன்கு  வதக்கிக் கொள்ளவும். வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் போகும் வரை வதக்கவும்.

அடுத்து நீளமாக அரிந்த குடைமிளகாய்களை சேர்த்து வதக்கி அதனுடன் சாதம் மற்றும் முருங்கைப் பூ மற்றும் தேவையான உப்பு (மிளகுத்தூள் விரும்பினால் சேர்க்கலாம்) சேர்த்து நன்றாக கிளறி பொடியாக நறுக்கிய பொதினா, கொத்தமல்லித்தழை போட்டு நன்கு கிளறி மேலே சிறிது நெய் விட்டு இறக்கினால் மணம் கமழும் முருங்கைப்பூ பிரியாணி ரெடி.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கை ஜம்முன்னு இருக்க இந்த 10 விஷயத்தை செஞ்சி பாருங்க!
முருங்கைப்பூ பிரியாணி

குறிப்பு - ஏலம் பட்டை போன்ற மற்ற சாமான்களின் மணம் முருங்கைப்பூ மணத்தை மட்டுப்படுத்தும் என்பதால் அவரவர் சாய்ஸ். உப்பு காரம் சரியாக இருந்தால் எதுவும் ருசிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com