வாழ்க்கை ஜம்முன்னு இருக்க இந்த 10 விஷயத்தை செஞ்சி பாருங்க!

Try these 10 things to make life smoother
Try these 10 things to make life smootherhttps://dingfasafe.cn

சுப்பேத்துறவங்க கிட்ட உம்முன்னும் கடுப்பேத்துறவங்க கிட்ட கம்முன்னும் இருந்தால், வாழ்க்கை சும்மா ஜம்முன்னு போகும். அப்படி ஜம்முன்னு போக இந்த 10 விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க.

* உங்களை யார் புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி அமைதியாகவே இருங்கள். புகழ்ச்சியை தலைக்கும், இகழ்ச்சியை மனதிற்கும் எடுத்துச் செல்ல வேண்டாம்.

* உலகத்திற்காகவோ, அடுத்தவர்களுக்காகவோ, உறவுக்காகவோ வாழ்வதை நிறுத்துங்கள். உங்களுக்காக வாழ கற்றுக்கொள்ளுங்கள்.

* நம் வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமற்றது. எல்லாமே மாறக்கூடியதாகும். அன்பு, பாசம், மனிதர்கள் ஆகியவையும் இதில் அடங்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

* வாழ்க்கையில் எப்போதுமே பூக்களை கொண்ட பாதைகள் மட்டுமே அமைவதில்லை. மேடு, பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும். நாம்தான் அதற்கு ஏற்றாற்போல வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

* ஈசலின் வாழ்க்கை ஒருநாள்தான். இறப்பு என்பதை பூமியில் பிறந்த எல்லோருமே எதிர்க்கொண்டுதான் ஆகவேண்டும். இறப்பை பற்றி நினைத்து கவலைப்பட்டால் இன்றைக்கான வாழ வேண்டிய நாள் நரகமாகிவிடும். எனவே, நிகழ்காலத்தை மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்ளுங்கள்.

* பணம் என்பது வருவதும், போவதுமாகவே இருக்கும். பணம் நிலைத்திருக்கும் தன்மைக்கொண்டதல்ல. ஆனால், நல்ல மனிதர்கள் அப்படியில்லை. அவர்கள் நம் வாழ்வில் நிலையானவர்கள். நிறைய பணம் சம்பாதிப்பதைக் காட்டிலும் நல்ல மனிதர்களை சம்பாதிப்பதே முக்கியமாகும்.

* உங்களைப் பிடித்தவர்கள் எக்காரணம் கொண்டும் உங்களை விட்டு விலகப் போவதில்லை. ஆனால், உங்களை வேண்டாம் என்று நினைப்பவர்களை இறுக்க பிடித்துக்கொள்ள தேவையில்லை. அவர்கள் போக வேண்டும் என்று நினைத்தால், போக விடுங்கள்.

* எதிர்ப்பார்ப்பு என்பது மனித குணமே! அடுத்தவர்களிடமிருந்து எதிர்ப்பார்ப்பதை முடிந்த வரை நிறுத்திக்கொள்ள பாருங்கள். அப்போதுதான் வாழ்வில் ஏமாற்றமும் குறைவாகவே இருக்கும்.

இதையும் படியுங்கள்:
எதற்கெடுத்தாலும் எரிச்சல்படும் மனநிலையை மாற்றுவது எப்படி?
Try these 10 things to make life smoother

* முடிந்தவரை அதிகம் பேசுவதை குறைத்துக்கொள்ளுங்கள். அடுத்தவர்களின் செயலை உன்னிப்பாகக் கவனியுங்கள். அது உங்களுக்கு சொல்லிக் கொடுக்கும் பாடங்கள் ஆயிரம்.

* அழகிய முகத்தையும், இனிமையான பேச்சையும் நம்ப வேண்டாம். இரண்டுமே காலத்திற்கு ஏற்றது போல மாறக்கூடிய தன்மை கொண்டவை. ஒருவரின் குணத்தைப் பார்த்து பழகுவதே சிறந்ததாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com