சுவையில் அசத்தும் வடநாட்டு ஸ்டைல் ஆலு ரெசிபிகள்!

Northern Style Aloo Recipes
healthy snacksImage credit - youtube.com
Published on

கஸ்தா ஆலு

தேவை:
சின்ன உருளைக் கிழங்குகள் - 20,
சீரகம், சோம்புத் தூள் - தலா 2 டீஸ்பூன், மிளகாய்த் தூள் - காரத்திற்கு ஏற்ப, தக்காளி சாஸ் அல்லது தக்காளி விழுது
- 4 ஸ்பூன், 
கொத்தமல்லித்தழை - சிறிது,
உப்பு - தேவைக்கு,
பெரிய வெங்காயம் -1
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 6 பற்கள்
வெண்ணெய் அல்லது நெய் - 2 ஸ்பூன்,
ஓமப்பொடி- 2 ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:
தோலுடன் போட்டு குழையாமல் வேகவைத்த உருளைக்கிழங்கை ஆறியதும் எடுத்து உள்ளங்கைகளின் நடுவே வைத்து லேசாக அழுத்தி சூடான எண்ணெயில் பொரித்துக் கொள்ளுங்கள். அடிகனமான வாணலியில் வெண்ணெய் விட்டு சீரகம் போட்டுப் பொரிந்ததும் பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு போட்டு வதக்கி தக்காளி சாஸ் அல்லது அரைத்த தக்காளி விழுதுடன் பொரித்த உருளைக்கிழங்கு, உப்பு, சோம்புத்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். நன்றாக வதங்கியதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், மல்லித்தழை, ஓமப்பொடி ஆகியவற்றைத் தூவி, சூடாகப் பரிமாறுங்கள்.

ஆலு கஸ்தா கச்சோரி

தேவை:
வேகவைத்த உருளைக்கிழங்கு - 2
சிவப்பு மிளகாய் தூள் -1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தூள்  -1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
சோம்புத்தூள்- 1/4 டீஸ்பூன்
கோதுமை மாவு - 1 கப்
எண்ணெய் - பொரிக்கத் தேவையானது
உப்பு- தேவைக்கு

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சலித்த கோதுமைமாவு எடுத்து, அதில் சிறிது உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து வெதுவெதுப்பான நீரில்  மென்மையாகப் பிசைந்து 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

மற்றொரு பேசினில் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து, தந்துள்ள மசாலாப் பொருட்களுடன் உப்பு சேர்த்து  கிளறி வைக்கவும்.பிசைந்த மாவை  உருண்டைகளாக்கி ஒவ்வொன்றையும் சற்று தடிமனான சப்பாத்தி போல் திரட்டி நடுவில் 1 ஸ்பூன் உருளை ஸ்டஃபிங்கை வைத்து வட்டத்தின் அனைத்து விளிம்புகளையும் மூடவும். அடிகனமான வாணலியில் தேவையான அளவு எண்ணெயை சூடாக்கி  தயாராக இருக்கும் கச்சோரிகளை போட்டு மிதமான சூட்டில்  இருபுறமும் பொன்னிறமாகும்வரை வறுத்து சாஸ் உடன் சூடாக பரிமாறவும்.

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான ரவா அல்வா-சோயா சிப்ஸ் செய்யலாம் வாங்க!
Northern Style Aloo Recipes

ஆலு பிந்தி சப்ஜி

தேவை:
உருளைக்கிழங்கு - 2
வெண்டைக்காய் -10
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 1
காஷ்மீர் மிளகாய்த்தூள் - 11/2 ஸ்பூன் கரம் மசாலாத்தூள் - 1/2
ஆம்சூர் பவுடர் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கஸூரி மேத்தி - கால் டீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு
கடைகளில் விற்கும் சப்ஜி மசாலா தூள் -1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை- சிறிது


செய்முறை:
கடாயில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்ததும் சிறு துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் வெண்டைக்காயை தனித்தனியே வறுத்து வைக்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம் தாளித்து நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு வெண்டைக்காய் சேர்த்து மஞ்சள்தூள், உப்பு, மிளகாய் தூள்,  சப்ஜி மசாலாத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக கிளறி 5 நிமிடங்கள் அடுப்பை மிதமான தீயில் வைத்து கலவை ஒன்று சேர்ந்து வந்ததும் இறக்கும்போது கஸூரி மேத்தியை கைகளால் கசக்கி சேர்த்து நன்றாக கிளறி  சிறிது நேரம்   மூடி  வைத்து திறந்து கொத்துமல்லி தூவி சப்பாத்தியுடன் பரிமாறவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com