இன்றைக்கு டேஸ்டியான ரவா அல்வா மற்றும் மொறு மொறு சோயா சிப்ஸ் ரெசிபிஸை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.
ரவா அல்வா செய்ய தேவையான பொருட்கள்.
ரவா-1கப்.
தண்ணீர்-2 கப்.
சர்க்கரை-1/4 கப்.
ஏலக்காய்தூள்-1தேக்கரண்டி.
உப்பு-1 சிட்டிகை.
கேரமல் செய்ய சர்க்கரை-5 தேக்கரண்டி.
நெய்-5 தேக்கரண்டி.
முந்திரி-10.
ரவா அல்வா செய்முறை விளக்கம்.
முதலில் ஒரு பவுலில் 1 கப் ரவை எடுத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் நன்றாக ஊறவைக்கவும். பிறகு ஊறிய ரவையை நன்றாக பிசைந்து ஒரு துணியில் வடிக்கட்டி ரவை பாலை எடுத்துக்கொள்ளவும்.
இப்போது அதை ஃபேனில் ஊற்றி ¼ கப் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக் கொண்டேயிருக்கவும். நன்றாக கண்ணாடி பதத்திற்கு வந்துவிடும் அப்போது 1 தேக்கரண்டி ஏலக்காய்ப்பொடி, 1 சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
இப்போது ஒரு ஃபேனில் 5 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு சர்க்கரை நன்றாக கேரமல் ஆன பிறகு அல்வாவில் அதையும் சேர்த்துவிட்டு 5 தேக்கரண்டி நெய்விட்டு கலந்து கடைசியாக 10 முந்திரியை சேர்த்து கிண்டினால் செம டேஸ்டில் ரவா அல்வா தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.
சோயா சிப்ஸ் செய்ய தேவையான பொருட்கள்.
சோயா-100 கிராம்.
கரம் மசாலா-1 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
தனியா தூள்-1 தேக்கரண்டி.
சீரகத்தூள்-1/2 தேக்கரண்டி.
இஞ்சிபூண்டு பச்சை மிளகாய் பேஸ்ட்-2 தேக்கரண்டி.
உருளை-1
உப்பு- தேவையான அளவு.
சோளமாவு-3 தேக்கரண்டி.
கொத்தமல்லி-சிறிதளவு.
மாவு செய்ய,
மைதா-1 கப்.
சோளமாவு-1 கப்.
மிளகுத்தூள்-1 தேக்கரண்டி.
உப்பு- தேவையான அளவு.
கார்ன் பிளேக்ஸ்-தேவையான அளவு.
எண்ணெய்- தேவையான அளவு.
சோயா சிப்ஸ் செய்முறை விளக்கம்.
முதலில் ஒரு பவுலில் 100 கிராம் சோயாவை சுடுத்தண்ணீரில் ஊறவைத்து பிழிந்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது இதை ஒரு பவுலில் சேர்த்து அத்துடன் 1 தேக்கரண்டி கரம் மசாலா, 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி தனியா தூள், ½ தேக்கரண்டி சீரகத்தூள், இஞ்சிபூண்டு பச்சைமிளகாய் பேஸ்ட் 2 தேக்கரண்டி, வேகவைத்த உருளை 1, உப்பு தேவையான அளவு, சோளமாவு 3 தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக பிசைந்துக்கொள்ளவும். இப்போது இதை ஒரு தட்டில் சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு பவுலில் மைதா 1கப், சோளமாவு 1 கப், மிளகுத்தூள் 1 தேக்கரண்டி, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிட்ட பிறகு தண்ணீர் சேர்த்துக் கலந்துவிட்டு வைத்துக்கொள்ளுங்கள். ஒரு தட்டில் கார்ன் பிளேக்ஸை நொறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது செய்து வைத்திருக்கும் உருண்டையை தட்டி மைதா கலவையில் முக்கி கார்ன் பிளேக்ஸில் பிரட்டி எடுத்து நன்றாக கொதிக்கும் எண்ணெய்யில் போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மொறு மொறு சோயா சிப்ஸ் தயார். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.