
வெஜ் பனீர் புர்ஜி செய்ய தேவையான பொருட்கள்:
பனீர் துருவல்- ஒரு பெரிய கப்
வேகவைத்த பச்சை பட்டாணி- மூணு டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கேரட்- ஒன்று
பொடியாக நறுக்கிய குடமிளகாய்-ஒன்று
பொடியாக நறுக்கிய பீன்ஸ்- நான்கு
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் -இரண்டு
பொடியாக நறுக்கிய தக்காளி- இரண்டு
இஞ்சி ,பூண்டு விழுது- ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை
மிளகாய்த் தூள் -ரெண்டு டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை- கைப்பிடி அளவு
கரம் மசாலாத்தூள் -கால் டீஸ்பூன்
பட்டை, சோம்பு தாளிக்க- தேவையான அளவு
எண்ணெய் ,உப்பு- தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் தாராளமாக எண்ணெய்விட்டு பட்டை சோம்பு தாளிக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் அதனுடன் குடை மிளகாய், கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கி வேகவிடவும். இறுதியாக பன்னீர் துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை சிறு தீயில் வைத்து கறுக விடாமல் கிளறி இறக்கவும். இந்த புர்ஜி பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறதோ அதுபோல் சாப்பிடுவதற்கும் மிகவும் ருசியாக இருக்கும்.
இந்த புர்ஜியை பாஸ்மதி அரிசி சாதத்துடன் கலந்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். இப்படி செய்து கொடுத்தால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் என்றாலும், குழந்தைகள் விரும்பி உண்பர்.
மாம்பழ மில்க் ஷேக்:
செய்ய தேவையான பொருட்கள்:
நார் அதிகம் இல்லாத மாம்பழம்- ஒன்று
பால்- ஒரு டம்ளர்
தேன்- ஒரு டீஸ்பூன்
சர்க்கரை- ஒரு டேபிள் ஸ்பூன்
நட்ஸ் ஃப்ளேக்ஸ்- ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
மாம்பழத்தை தோல் சீவி சதைப்பற்றை எடுத்துக்கொண்டு அதனுடன் குளிர்ந்த பால், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். பிறகு அதில் தேன் கலந்து அழகான க்ளாஸ்களில் ஊற்றி நட்ஸ் ஃப்ளேக்ஸ் தூவி அலங்கரித்து சாப்பிட கொடுக்கவும். வெயிலுக்கு இதமாக குளு குளு என்று இருக்கும்.