
ஆந்திரா ஸ்பெஷல் பெல்லம் கவலு:
மைதா 1 கப்
ரவா 1/4 கப்
உப்பு தேவையானது
பொடித்த சர்க்கரை 2 ஸ்பூன்
ஏலக்காய் பொடி 1/2 ஸ்பூன்
வெல்லம் 1 கப்
நெய் 2 ஸ்பூன்
ஒரு பாத்திரத்தில் மைதாவை சேர்த்து அதில் ரவை, உப்பு, சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கலக்கவும். இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மாவை பிசைந்து 20 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அச்சின் மீது மாவை வைத்து ஷெல் வடிவில் திரட்டி எடுத்துக்கொள்ளவும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து செய்து வைத்துள்ள செல் வடிவ மாவை மெதுவாக சேர்த்து பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் துருவிய வெல்லம் , சிறிது தண்ணீர் இரண்டையும் சேர்த்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டி சிறிது நெய் சேர்த்து நான்கு நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். அதில் வறுத்து ஆற வைத்துள்ள ஷெல்களை சேர்த்து மெதுவாக கலந்து ஒரு பத்து நிமிடம் வைத்தால் சுவையான பெல்லம் கவலு தயார். இந்த ஹெல்த்தியான ஸ்வீட்டை குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள். இரண்டு மூன்று நாட்கள் வைத்திருந்து சாப்பிடலாம்.
உப்புமா கொழுக்கட்டை:
அரிசி ரவை ஒரு கப்
பச்சை மிளகாய் 2
காய்ந்த மிளகாய் 1
உப்பு தேவையானது
நெய் 2 ஸ்பூன்
சமையல் எண்ணெய் 2 ஸ்பூன்
தாளிக்க:
கடலைப்பருப்பு 2 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை
வாணலியில் நெய் மற்றும் சமையல் எண்ணெய் 2 ஸ்பூன் விட்டு கடுகு, சீரகம் , கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பொடியாக கிள்ளிய காய்ந்த மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து போட்டு கடுகு பொரிந்ததும் ரெண்டு கப் தண்ணீர் விட்டு உப்பு போடவும். தண்ணீர் கொதித்து நடுக்கொதி வந்ததும் அரிசி ரவையை சேர்த்து கிளறவும்.
அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தட்டைப் போட்டு மூடி நிதானமாக வேகவிடவும். அரிசி ரவை நன்கு வெந்து கெட்டியானதும் இறக்கி சிறிது ஆறியதும் சிறுசிறு கொழுக்கட்டைகளாக பிடித்து வைக்கவும். இதனை இட்லி பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதித்ததும் கொழுக்கட்டைகளை இட்லி தட்டில் வைத்து வேகவிட்டு எடுக்க மிகவும் ருசியான உப்புமா கொழுக்கட்டை தயார். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி பிரமாதமாக இருக்கும். செய்துதான் பாருங்களேன்!