
கம்பு பாயசம்:
தேவையான பொருட்கள்:
கம்புரவை - 1கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
வெல்லம் - 1 1/2 கப்
தேங்காய் துருவல் - 1/4 கப்
ஏலத்தூள் - 1 டீஸ்பூன்.
முந்திரி - 5
நெய் - 1 ஸ்பூன்
செய்முறை:
வாணலியில் பாசிப்பருப்பை முதலில் வாசனை வரும் வரை வறுக்கவும். கம்பு ரவையையும் வறுக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் பருப்பையும், கம்பு ரவையையும் தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும். வெல்லத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி காய்ச்சி வடிகட்டவும். தேங்காய் துருவலை சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும். வெந்த பருப்பு கம்பு ரவை கலவையில் காய்ச்சிய வெல்லத்தை ஊற்றவும். அதனுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து ஒரு கொதி வந்ததும், ஏலப்பொடி தூவி நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும். சுவையான சத்தான கம்பு பாயசம் ரெடி.
கேழ்வரகு பால்:
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு - 1 கப்
வெல்லம் - 1 கப்
ஏலத்தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
கேழ்வரகை முதல் நாள் காலை ஊற வைக்கவும். அதனை இரவு நீரில் இருந்து எடுத்து ஒரு துணியில் கட்டி வைக்கவும். இவ்வாறு செய்வதால் அந்த கேழ்வரகு சிறியதாக வெள்ளை நிறத்தில் முளைத்திருக்கும்.
அடுத்த நாள் இதில் சிறிது சிறிதாக நீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து வடிகட்டவும். பின் வெல்லம் சேர்த்து , அதனுடன் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள் சேர்த்து அருந்தவும்.
குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.